புணர்ப்பு தோஷம் பாதிப்பு என்ன செய்யும்?

179

புணர்ப்பு தோஷம் பாதிப்பு என்ன செய்யும்?

சனி சந்திரன் சேர்க்கை:

ஜாதக ரீதியாக சந்திரன் மற்றும் சனி சேர்க்கை புணர்ப்பு தோஷம் என்று கூறப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் சனி மற்றும் சந்திரன் இணைந்து நின்றாலோ, பரிவர்த்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தால் புணர்ப்பு தோஷம் ஏற்படுகிறது.

புணர்ப்பு தோஷம் பாதிப்பு:

ஜாதகத்தில் புணர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் பாதிப்பு ஏற்படுகிறது. அப்படியே திருமணம் நடந்தாலும் பிரிவில் தான் முடிகிறது. நிம்மதியற்ற வாழ்க்கை அமையும். மேலும், பலரும் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படும்.

புணர்ப்பு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பொதுவாழ்விலும், ஆன்மீகத்திலும் அதிகமாக ஈடுபவதால், அவர்களுக்கு குடும்ப பற்று இல்லாமல் போய்விடுகிறது. இதுவே அவர்களுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

புணர்ப்பு தோஷம் விதிவிலக்கு:

குரு பார்வை அல்லது குரு சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் அது தோஷம் கிடையாது.

குரு வீட்டில் சனி சந்திர சேர்க்கை பெற்று புணர்ப்பு தோஷம் ஏற்பட்டிருந்தால் அது தோஷம் கிடையாது.

சுக்கிர பகவானின் வீட்டில் புணர்ப்பு பெற்றால் தோஷம் நீங்குவதோடு பேரும், புகழும் கிடைத்துவிடுகிறது.

பரிகாரம்:

சனிக்கிழமை தோறும் சந்திரன் கோயிலான திருப்பதி வெங்கடாஜலபதி தரிசனம் செய்வது சிறந்த பலன் கொடுக்கும்.

சனிக்கிழமையில் பௌர்ணமி வந்தால் அன்றைய நாளில் சத்தியநாராயண விரத பூஜை செய்தால் சனி – சந்திர சேர்க்கையால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சி கொடுக்கும்.

புரட்டாசி மாத சனிக்கிழமையில் குரு பகவானுக்குரிய நிறமான மஞ்சள் நிற ஆடையில் சந்திரனின் காரகமாகிய உணவை, சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் வைத்து ஏழுமலையானுக்கு படையலிட புணர்ப்பு தோஷம் நீங்கும்.

பச்சரிசி மாவில் இனிப்பு வெல்ல பாகு எடுத்து ஏலக்காய், எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கும். அதோடு, தடைபட்ட திருமணமும் விரைவில் நடந்து முடியும்.