பெண்களுக்கு தான தர்மம் செய்தால் பந்த தோஷம் நீங்கும்!

112

பெண்களுக்கு தான தர்மம் செய்தால் பந்த தோஷம் நீங்கும்!

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம் மற்றும் சம்ஸ்கார தோஷம் என்று 5 வகையான தோஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று வாழ்க்கையில் நாம் செய்யும் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், ப்ரணகால தோஷம் என்று 5 விதமான தோஷங்கள் சொல்லப்படுகிறது.

பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் மனிதர்களை பாதிக்கும் தோஷங்களுக்கு பரிகாரங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த தோஷங்கள் எதனால், எப்படி பாதிக்கிறது? அதற்கு என்ன பரிகாரம் என்பது குறித்து ஒவ்வொன்றாக இந்தப் பதிவில் பார்ப்போம். முதலில் நிமித்த தோஷமும், பந்த தோஷமும் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்….

நிமித்த தோஷம்:

நமக்கு சாப்பாடு செய்து, சாப்பாடு பரிமாறுபவர் நல்ல மனதுடன் சமையல் செய்து அதனை தமக்கும், மற்றவர்களுக்கும் நல்ல மனதுடன் பரிமாற வேண்டும். சமையல் செய்யும் போது அன்பு, அக்கறை, பாசம் என்று எல்லாமும் இருக்க வேண்டும். வேண்டா, வெறுப்பாக சமையல் செய்யக் கூடாது.

சமைக்கப்பட்ட உணவானது எறும்பு, பல்லி, காகம், நாய் ஆகியவற்றின் எச்சில் படாமல் இருக்க வேண்டும். சமையல் செய்யும் போது நமது தலைமுடி விழக் கூடாது. இதில், எது நேர்ந்தாலும் அது குற்றமாகும். இதற்கு நிமித்த தோஷம் என்று பெயர். கெட்ட எண்ணங்களுடன் சமையல் செய்தவன் உணவானது கெட்ட எண்ணங்களைத் தான் உருவாக்கும். நல்ல எண்ணங்கள், செயல் உள்ள ஒருவன் சமைத்த உணவானது நல்ல எண்ணங்களையும், சிந்தனைகளையும் உருவாக்கும்.

பந்த தோஷம்:

நம்மை நம்பி வந்தவர்களுக்கும், நம்முடன் பழகியவர்களுக்கும் துரோகம் செய்வது அல்லது அவர்களை பழிவாங்குவது பந்த தோஷமாகும். இந்த தோஷம் நீங்க, தாய், தந்தை வழி உறவுகளான தாய் மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோரது வழியில் உள்ள பெண்களுக்கு உங்களால் முடிந்த தான, தர்மங்களை செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால், ஏழை, எளிய பெண்களுக்கு உதவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.