மகர ராசிக்காரர்களின் திருமண யோகம்

80

மகரராசிக்காரர்களுக்கு குருபகவான் தற்போது 12-ம் இடத்துக்கு வந்திருக்கிறார். இந்த குருபெயர்ச்சி காலக்கட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.

மகர ராசிமகரராசிக்காரர்களுக்கு குருபகவான் தற்போது 12-ம் இடத்துக்கு வந்திருக்கிறார். 12-ம் இடம் என்பது விரய ஸ்தானம் ஆகும். இந்த குருபெயர்ச்சி காலக்கட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் அந்த அலைச்சல் எல்லாம் ஆன்மீக பயணம் ஆகவும், வாழ்வின் அடுத்தகட்ட வெற்றிக்கான அடித்தளம் ஆகவும் இருக்கும்.

குருபகவான் 12-ம் இடத்துக்கு வந்திருப்பதால் மகர ராசிக்காரர்கள் பயப்பட வேண்டியதில்லை. குருபகவானின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக இருப்பதால் சற்று சோதனைக்கு பிறகு அனைத்தும் வெற்றியாகவே முடியும். சுபநிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தும் வாய்ப்பு உருவாகும். என்றாலும் வாரிசுகளுக்கு வரன் தேடும்போது அவசரப்படாமல் நிதானமாக நடந்து கொள்வது நல்லது.

குருபகவான் 1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்துக்கு வருகிறார். அந்த கால கட்டம் மகரம் ராசிக்காரர்களுக்கு சிறந்த காலமாகும். இந்த சமயத்தில் குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். திருமண பேச்சுவார்த்தைகளில் வெற்றி கிடைக் கும். இந்த வெற்றியை உறுதிபடுத்த வியாழக்கிழமைகளில் குருபகவானுக்கு வழிபாடுகள் செய்யலாம். முடிந்தவர்கள் ஆலங்குடி குருபகவான் ஆலயத்துக்கு சென்றுவரலாம்.

2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு மகர ராசி பெண்களுக்கு மேன்மை உண்டாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வருமானம் அதிகரிக்கும். இளம் பெண்களுக்கு நினைத்த இடத்தில் திருமணம் கைகூடும். இதை உறுதிபடுத்த சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபட்டு வரலாம். சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி அர்ச்சனை செய்தால் நன்மை உண்டாகும்.

பொதுவாக இந்த குருபெயர்ச்சி சற்று பின்னடைவை ஏற்படுத்தும் என்று பெரும்பாலான ஜோதிடர்கள் கணித் துள்ளனர். ஆனால் பொறுமையாக இருந் தால் வெற்றிபெறலாம் என்பதையும் சொல்லியுள்ளனர். அவசரப்பட்டு முடிவு எடுப்பதும், அதிகார தோரணையில் பேசுவதும் தற்போதைய சூழ்நிலையில் கை கொடுக்காது என்பதை மகரராசிக்காரர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக திருமண பேச்சுவார்த்தைகளின் போது கவனம் தேவை.

குரு 8-ம் இடத்தை பார்ப்பதால் வாரிசு களின் திருமண விசயமாக வெளியூருக்கு சென்றுவரவேண்டிய நிலை ஏற்படலாம். அந்த பயணங்களை வெற்றிகரமாக மாற்ற வேண்டுமானால் தட்சிணாமூர்த்தியின் அருள்பார்வை வேண்டும். வெல்லத்தை தானமாக கொடுத்துவிட்டு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை களில் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம் ராசியில் உத்திராடம் (2,3,4-ம் பாதங்கள்) திருவோணம், அவிட்டம் (1,2-ம் பாதங்கள்) ஆகிய மூன்று நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மனை வழிபட வேண்டும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்வுகள் விரும்பியபடி கைகூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூவரசன் குப்பத்தில் உள்ள லட்சுமிநரசிம்மர்-அமிர்தவல்லி தாயாரை வழிபட வேண்டும். சனிக்கிழமைதோறும் வராகரை தரிசனம் செய்வதும் நல்லது. குறிப்பாக திருப்பதியில் உள்ள ஆதிவராகரையும், ஸ்ரீமுஷ்ணம் தளத்தில் உள்ள வராகரையும் வழிபட்டால் நல்லது. வராகரை நினைத்து குருபெயர்ச்சி உள்ள ஒரு வருட காலமும் சனிக்கிழமை களில் விரதம் இருந்தால் நினைத்த காரியங்களில் வெற்றி உண்டாகும்.

மகரத்தில் சஞ்சரிக்கும் குரு 5,7,9 ஆகிய மூன்று இடங்களையும் பார்க்கிறார். இந்த மூன்று இடங்களின் பார்வை சக்தி வாய்ந்தது. வியாழக்கிழமைகளில் நீங்கள் எந்த அளவுக்கு குரு கவசம் பாடி குருவை வழிபடுகிறீர்களோ அதற்கேற்ற நன்மை உண்டாகும். தாமதமாகி வந்த சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.

தட்சிணாமூர்த்திகளில் யோக தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. வடசென்னையில் இருப்பவர்கள் வடிவுடை அம்மன் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். அந்த வழிபாடு காரணமாக நீங்கள் இதுவரை தள்ளிபோட்டு வந்த திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கும். பணம் இல்லை என்பதற்காக சிலர் சுப காரியத்தை தாமதம் செய்திருப்பார்கள். அவர்களுக்கு தற்போதைய குருபெயர்ச்சி சுபச்செலவாக மாறும்.

12-ம் இடத்தில் குருபகவான் ஆட்சி பெறுவதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை உடனே ஏற்பாடு செய்து நடத்துவது நல்லது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார செலவு அதிகரிக்கும். நீங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்து சுபச்செலவாக அதை மாற்றினால் பணம் விரயம் ஆனாலும் அது உங்களுக்கு நன்மை தருவதாகவே இருக்கும்.

தற்போது மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும் உள்ளது. எனவே எல்லா விசயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். திருமண விசயங்களில் பெண்கள் பெற்றோரின் அறிவுரையை கேட்டால் மட்டுமே நன்மை தரும். மகரம் ராசிக்காரர்கள் பொதுவாக இந்த காலகட்டத்தில் ஸ்ரீ முஷ்ணம் வராகரை வழிபடுவது மிக மிக நல்லது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழவரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள் துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், ‘பாவன விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.

திருமலை, காஞ்சி, திருக்கோவிலூர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர் இங்கே சிறிய மூர்த்தியாக அருள்கிறார். மூர்த்தி தான் சிறியது… ஆனால் கீர்த்தி மிகப்பெரியது.அவரின் தோற்றம் கொள்ளை அழகு. மேற்கு நோக்கியபடி வராகரின் திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது.

வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகா விஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது. பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றி யதால் ‘யக்ஞவராகர்’ என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.

வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் தானே என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார். மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக் குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என் பது புராண வரலாறு.

தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக் குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்கு கிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றி ருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது.

பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ் கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகவரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு. உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவை திருச் சுற்றில் உள்ளன.

தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக் கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார். இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் வணங்கினால், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும். பகை அச்சம் விலகும். காரியத்தடைகள் நீங்கும் என்பது கண்கூடு.

இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும். பக்தர்கள் தங்குவ தற்கான விடுதி வசதியும், மதியம் இலவச அன்ன தானமும் திருக்கோவில் சார்பில் செய்யப்படுகிறது.