மனிதர்களை பாதிக்கும் 10 விதமான தோஷங்கள் என்னென்ன?

80

மனிதர்களை பாதிக்கும் 10 விதமான தோஷங்கள் என்னென்ன?

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம் மற்றும் சம்ஸ்கார தோஷம் என்று 5 வகையான தோஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று வாழ்க்கையில் நாம் செய்யும் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், ப்ரணகால தோஷம் என்று 5 விதமான தோஷங்கள் சொல்லப்படுகிறது.

பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் மனிதர்களை பாதிக்கும் தோஷங்களுக்கு பரிகாரங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த தோஷங்கள் எதனால், எப்படி பாதிக்கிறது? அதற்கு என்ன பரிகாரம் என்பது குறித்து ஒவ்வொன்றாக இந்தப் பதிவில் பார்ப்போம். முதலில் அர்த்த தோஷமும், வஞ்சித தோஷமும் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்….

அர்த்த தோஷம்:

தவறான வழியில் சம்பாதித்து அதன் மூலம் வரும் பணத்தைக் கொண்டு வாங்கப்படும் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படுவது அர்த்த தோஷம். ஒரு ரூபாயாக இருந்தாலும் அதனை நேர்மையான வழியில் சம்பாதித்து அதில் சாப்பிடும் ஒரு பருக்கை சோறாக இருந்தாலும் அது தான் நமது உடலில் ஒட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

வஞ்சித தோஷம்:

பலான படங்கள் பார்ப்பது, தவறான எண்ணங்கள், தவறான சிந்தனைகள் மூலம் உடலில் தாக்கம் ஏற்பட்டு அது பித்த நாடிகளை பாதிக்கச் செய்கிறது. அதோடு, உடலில் பல வியாதிகளும் உண்டாகிறது. இதற்கு வஞ்சித தோஷம் என்று பெயர். இந்த தோஷம் நீங்க உடன் பிறந்த சகோதரிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்து வந்தால் நன்மை கிடைக்கும். அப்படி சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழை, எளிய பெண்களுக்கு தானம் கொடுத்தால் வஞ்சித தோஷம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.