மன சஞ்சலம் தீர செய்ய வேண்டிய பரிகாரம்!
பொதுவாக ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஜாதகத்தில் ஏற்படும் கிரக நிலைகளின் மாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் உண்டாகிறது. முன் ஜென்மத்தில் செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மத்தில் அதற்குரிய பலன்கள் அமைகிறது. ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து அல்லது பகை கிரகத்துடன் இருந்தால் மனக் குழப்பம் அதிகரிக்கும்.
அப்படி ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்து இருப்பவர்கள் பௌர்ணமி நாளில் சந்திரனை தரிசனம் செய்துவிட்டு ஓம் சந்திராய நமஹ என்று 9 முறை சொல்வது சிறப்பு வாய்ந்தது. அதோடு, சந்திரனுக்குரிய பச்சரிசியில் சாதம் வடித்து, அதனை நீங்கள் சாப்பிட்டு, உங்களைச் சார்ந்தவர்களுக்கும் அளித்து சாப்பிட வைப்பது மிகவும் நல்லது. ஒவ்வொரு திங்களன்றும் இவ்வாறு செய்து வர மேன்மை உண்டாகும்.
கடக ராசியைச் சேர்ந்தவர்கள், 2ஆம் எண்ணில் பிறந்தவர்கள், திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் ஆகியோர் முத்து மாலை மற்றும் முத்து மோதிரம் அணிந்து கொள்ளலாம். அப்படி செய்வதன் மூலமாக சந்திர பகவானின் முழு அருளும் கிடைக்கும். அதோடு, மன நிம்மதியும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.