மிளகாயை இப்படி செய்தால் கடனும், கஷ்டமும் காணாமல் போகும்!

143

மிளகாயை இப்படி செய்தால் கடனும், கஷ்டமும் காணாமல் போகும்!

நாம் செய்த கர்ம வினை காரணமாக வாழ்க்கையில் தீராத கடன் பிரச்சனை, தீராத கஷ்டங்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. பிறவிக் கடனை அடைப்பதற்காகத் தான் மனித பிறவி எடுத்து இருக்கிறோம். இந்தப் பிறவியில் நாம் கஷ்டப்பட்டு கொண்டிருப்பதற்கு நிச்சயமாக முற்பிறவியில் நாம் செய்த பாவங்களும் ஒரு காரணம்தான். ஆக நம்முடைய கர்ம வினைகளை முதலில் நிவர்த்தி செய்து கொண்டாலே போதும். நம்முடைய கஷ்டங்கள் தானாக குறைந்துவிடும்.

உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகளுக்கு, நீங்கள் செய்த கர்ம வினைகள் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கும். உங்களுக்கு இந்த பிறவியில் இருக்கக் கூடிய கடன் பிரச்சனையோடு சேர்த்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிறவிக் கடனை அடைப்பதற்கான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய கர்மாக்களை கரைக்கக் கூடிய சக்தி கொண்டவன் அந்த சிவபெருமான். எம்பெருமானின் பாதங்களை சிவசிவா என்று பற்றிக் கொண்டாலே போதும்.

தலையெழுத்தை மாற்றக்கூடிய அந்த சிவபெருமானை நினைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகின்றோம். 11 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 11 நாட்களில் ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்கு கட்டாயம் நீங்கள் செல்ல வேண்டும். தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு 3 வரமிளகாய், 3 மிளகு, இந்த இரண்டு பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். சிவன் கோயிலுக்கு சென்று சிவ பெருமானை மனதார வேண்டிக் கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு, கோயிலை 3 முறை வலம் வரவேண்டும்.

கோயிலில் வழிபாடு செய்யும் போது, செய்யும்போது முழுக்க முழுக்க உங்கள் மனதார கடனிலிருந்து எப்படியாவது வெளிவர வேண்டும் என்ற பிரார்த்தனையை செய்துகொள்ள வேண்டும்.வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயிலை வலம் வந்த பின்பு, நந்தீஸ்வரர் இருக்கும் இடத்தில் நின்று கொண்டு, சிவபெருமானே பார்த்தவாறு நின்று, நீங்கள் எடுத்துச் சென்ற வர மிளகாயையும், மிளகையும் உங்கள் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு உங்களுடைய தலையை வலது புறமாக மூன்று முறை சுற்ற வேண்டும். கையில் இருக்கும் பொருளை அப்படியே ஒரு பேப்பரில் வைத்தோ, கவரில் போட்டு எடுத்து உங்கள் வீட்டுக்கு வர வேண்டும்.

வீட்டிற்கு வந்து ஒரு சிறிய மண் அகல் விளக்கில் கட்டி கற்பூரத்தை ஏற்றி அந்த நெருப்பில் இந்த வரமிளகாயும் மிளகையும் போட்டு விடுங்கள். இதை வீட்டிற்கு வெளிப்புறத்தில் வைத்து எரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பதினோரு நாட்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் நிச்சயமாக உங்களுடைய கர்ம வினைகள் குறைக்கப்பட்டு, உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினையும் படிப்படியாக குறையும். இப்படி பதினோரு நாட்கள் உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும், உங்களுக்கு கடன் பிரச்சனை இல்லை என்றாலும் உங்களுடைய பிறவிக் கடனை தீர்ப்பதற்கு மூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து சிவபெருமான் கோயிலுக்கு சென்று மேல் சொன்ன படி பரிகாரத்தை செய்தாலே போதும்.

கர்மவினைகள் குறைக்கப்பட்டு நீங்கள் மோட்சத்தை அடையலாம். சிவபெருமானை நினைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் கை மேல் பலன் உண்டு.