முறை தவறி பழகினால் கல்பித தோஷம்!

114

முறை தவறி பழகினால் கல்பித தோஷம்!

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம் மற்றும் சம்ஸ்கார தோஷம் என்று 5 வகையான தோஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று வாழ்க்கையில் நாம் செய்யும் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், ப்ரணகால தோஷம் என்று 5 விதமான தோஷங்கள் சொல்லப்படுகிறது.

பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் மனிதர்களை பாதிக்கும் தோஷங்களுக்கு பரிகாரங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த தோஷங்கள் எதனால், எப்படி பாதிக்கிறது? அதற்கு என்ன பரிகாரம் என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம். அந்த வகையில் இன்று ஸ்தான தோஷம் மற்றும் கல்பித தோஷம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்….

ஸ்தான தோஷம்:

நல்ல அதிர்வுகள் உள்ள இடத்தில் தான் உணவுகள் சமைக்கப்பட வேண்டும். உணவு சமைக்கும் போது யாரிடமும் வீண் வாக்குவாதம், சின்ன சின்ன விசயங்களுக்காக விவாதம் செய்தல் போன்றவை நடந்தால், அதனால், உணவு அசுத்தப்பட்டு விடும். அதே போன்று கழிப்பறை, மருத்துவமனை, வழக்கு மன்றம், போர்க்களம் ஆகியவற்றிற்கு அருகில் சமைக்கப்படும் உணவு சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. இதற்கு தான் ஸ்தான தோஷம் என்று பெயர். நாம், சமைக்கும் உணவை அன்புடனும், நேர்மையுடனும், பற்று உடனும் சமைத்து அதனை மற்றவர்களுக்கும் பரிமாற வேண்டும்.

கல்பித தோஷம்:

பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இது போன்று தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் இந்த தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.