ராகு தோஷம் நீங்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம்!

112

ராகு தோஷம் நீங்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரம்!

பொதுவாக ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் வந்து சேரும். அப்படியில்லை என்றால் சொத்து கிடைப்பதில் இழுபறியாகும். திருமணத் தடை ஏற்படும். குழந்தை பாக்கியமும் தாமதமாகும். இவ்வளவு ஏன் சட்ட சிக்கலில் சிக்கி சின்னா பின்னமாகும் நிலையும் ஏற்படும்.

இதனால், மன விரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி பாவங்களில் சிக்கிக் கொள்வீர்கள். குடும்பப் பிரிவு என்று பல பிரச்சனைகள் ஏற்படும். இதெல்லாம் ராகு தோஷத்தால் ஏற்படும். இது போன்ற தோஷங்களில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன.

அந்த வழிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 6.15 மணி முதல் 6.45 மணி வரையில் 5 அகல் விளக்கை வீட்டு பூஜையறையில் ஏற்றி வைக்க வேண்டும். தினந்தோறும் துர்க்கை காயத்ரி மந்திரத்தை சொல்ல வேண்டும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகு காலத்தில் துர்க்கையை 5 அகல் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

எலுமிச்சை தீபம் ஏற்றக் கூடாது. 3 எலுமிச்சம் பழத்தை துர்க்கை அம்மனிடம் வைத்து வழிபட்டு அதனை பிரசாதமாக பெற்றுக் கொண்டு வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்துடன் சாறு பிழிந்து குடிக்க வேண்டும். வருட த்தில் ஒரு முறையாவது பட்டீஸ்வரம் சென்று அங்குள்ள துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்து வர வேண்டும்.

முடிந்த போது எல்லாம் பக்தர்களுக்கு உளுந்து சாதம் பிரசாதமாக கொடுக்க வேண்டும். கோமாதவிற்கு கடலைப் பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கி கொடுக்க வேண்டும். தினந்தோறும் துர்க்கை, ராகுவை வழிபாடு செய்ய வேண்டும். சிறியதொரு கருங்கல்லை எப்போதும் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷத்திற்கு மிக எளிய பரிகாரமாகும்.