ராகு, தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகார வழிபாடு!

136

ராகு, தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகார வழிபாடு!

ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தினந்தோறும் துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும். தினந்தோறும் அரசு, வேம்பு மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர், நாகர் சிலைகளை 9 முறை சுற்றி வர வேண்டும். துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நவக்கிரக சன்னதியிலுள்ள ராகு பகவானை தினந்தோறும் வலம் வர வேண்டும். எந்தளவிற்கு ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப 9 முறையோ, 27 முறையோ அல்லது 108 முறையோ வலம் வர வேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டலம் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.