வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் நரம்பு பிரச்சனை வரும்!

134

வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்தால் நரம்பு பிரச்சனை வரும்!

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அர்த்த தோஷம், நிமித்த தோஷம், ஸ்தான தோஷம், குண தோஷம் மற்றும் சம்ஸ்கார தோஷம் என்று 5 வகையான தோஷங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று வாழ்க்கையில் நாம் செய்யும் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் வஞ்சித தோஷம், பந்த தோஷம், கல்பித தோஷம், வந்தூலக தோஷம், ப்ரணகால தோஷம் என்று 5 விதமான தோஷங்கள் சொல்லப்படுகிறது.

பாவ, புண்ணியங்களின் அடிப்படையில் மனிதர்களை பாதிக்கும் தோஷங்களுக்கு பரிகாரங்களை முன்னோர்கள் கூறியுள்ளனர். இந்த தோஷங்கள் எதனால், எப்படி பாதிக்கிறது? அதற்கு என்ன பரிகாரம் என்பது குறித்து ஒவ்வொன்றாக பார்ப்போம். அந்த வகையில் இன்று குண தோஷம் மற்றும் வந்தூலக தோஷம் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்….

குண தோஷம்:

நெய், அரிசி, மாவு, பருப்பு, பால் ஆகியவை சாத்வீகமானவை. நாம் சமைக்கும் உணவுப் பொருட்களில் சாத்வீக குணம் அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சாத்வீக உணவு தான் ஆன்மீகத்தைக் கொடுக்கும். காரம், புளிப்பு, உப்பு ஆகியவை ராஜஸிகமானவை. இது உலக மாயை தூண்டி சுய நலத்திற்கு வழி வகுக்கிறது. இதே போன்று, பூண்டு, வெங்காயம், முட்டை, மாமிசம் ஆகியவை தாமஸிகமானவை. இது முற்றிலும் தீய எண்ணங்களை மனதில் வளரச் செய்கிறது.

வந்தூலக தோஷம்:

ஒருவர் தன்னைவிட அதிக வயதுள்ள பெண்ணை திருமணம் செய்யும் போது திருமணம் செய்பவருக்கு சுவாசக் கோளாறு, நரம்பு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். அப்படி வரும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் என்று பெயர். இந்த தோஷம் நீங்குவதற்கு வயதான தம்பதிகளுக்கு தான தர்மங்கல் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கை துணி என்று தானமாக வழங்கலாம்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர் சோலைக்குச் சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்துவிட்டு ஏழை தம்பதிகளுக்கு தான தர்மங்கள் செய்ய வேண்டும். இதன் மூலமாக அதிக வயதுடைய பெண்ணை திருமணம் செய்ததன் மூலம் ஏற்பட்ட இந்த வந்தூலக தோஷம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.