வழக்கு பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

324

வழக்கு பிரச்சனை தீர செய்ய வேண்டிய பரிகாரம்!

உலகில் வாழும் மக்கள் அனைவரும் எதோ ஒரு வழியில் கடன் பட்டு தான் வாழ்கின்றனர்̣. அப்படி கடன் இருப்பதினால் பலரும் நிம்மதி இல்லாமல் தினமும் குழப்பத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கு தீராத கடன் இருந்தால், அதை தீர்க்க செவ்வாய்கிழமை மிகவும் உகந்த நாள் ஆகும். சரி, செவ்வாய் கிழமை கடன் தீர்க்க உகந்த நாள் என்று ஏன் கூறுகிறோம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

நவகிரகங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய் , புதன் , குரு, சுக்கிரன் மற்றும் சனி ஆகிய ஏழு கிரகங்களுக்கும் ஹோரைகள் உண்டு. ஹோரை என்பது ஒருமணி நேரம். ஹோரை என்ற சொல்லில் இருந்துதான் ஹௌர் (Hour) என்ற வார்த்தை வந்ததாகச் சொல்லப் படுகிறது. ஒருநாள் என்பதை தினமும் காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அதாவது 24 மணி நேரமாக ஜோதிடத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக காலை 6 மணி என்பதை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஹோரைகள் கணக்கிடப்படுகின்றன.

ஹோரை தொடங்கும் நேரம் காலை 6 மணி. இதில் அந்தந்த கிழமைக்கான அதிபதியின் ஹோரை அந்த நாளில் காலை 6 மணிக்கு தொடங்கும். உதாரணமாக செவ்வாய்க் கிழமையை எடுத்துக்கொண்டால் செவ்வாயினுடைய ஹோரை செவ்வாய் அன்று காலை 6 மணிக்கு தொடங்கும். செவ்வாய் ஹோரையில் நிலம் வாங்குவது, விற்பது, ஒப்பந்தம் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சினைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் மேற்கொள்ளலாம். மேலும் கடன், நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும் இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும்.

இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதுமட்டுமல்லாமல் நோய் உள்ளவர்கள் செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், செவ்வாய்கிழமை செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் வெற்றி கிடைக்கும். ஆனால் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் கடன் அதிகரித்து பெரும் தொல்லையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எனவே செவ்வாய், முருக கடவுளுக்கு உகந்த நாள். ஆகவே செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.