வாழ்க்கைக்கு தேவையான எளிய பரிகாரங்கள்!

114

வாழ்க்கைக்கு தேவையான எளிய பரிகாரங்கள்!

யாராக இருந்தாலும் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக, சந்தோஷமாக குழந்தை, குடும்பம் என்று தான் வாழ ஆசைப்படுவார்கள். ஆனால், எல்லோருக்கும் இது போன்ற ஒரு வாழ்க்கை அமைந்துவிட்டால் கோயில் இருக்காது, இறைவழிபாடும் இருக்காது.

படைப்பதும் அவனே, காப்பவனும் அவனே, அழிப்பவனும் அவனே (இறைவன்). எல்லாம் அவனுக்கு தெரியும். அப்படியிருக்கும் போது யார் யாருக்கு என்னென்ன எப்போது தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு வழங்குவான். ஜோதிடத்தில் கிரக நிலைகளுக்கு ஏற்ப ஒருவருக்கு இன்ப, துன்பங்கள் நிகழும்.

இதுவே வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடன் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் உடனே ஜாதகத்தை பார்த்து அதற்குரிய பரிகாரத்தை செய்து கொள்வோம். அதற்கு கோயில், குளம் தான் செல்வோம். ஆம், இது போன்று ஒருவருக்கு நிகழ்ந்தால், முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் நலக் கோளாறுகளிலிருந்து விடுபடும்.

கை நிறைய வருமானம் இருந்தும் பணம் வீணாக விரையமாகிக் கொண்டே இருந்தால் தினந்தோறும் காலையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்டுகள் வழங்கி வந்தால், பணம் வீண் விரையமாவது கட்டுப்படும்.

மன வருத்தம், என்னவென்றே தெரியாத குழப்பம், மன அழுத்தம், சோர்வு ஆகியவை நாள் முழுவதும் இருப்பின் இரவு தூங்க செல்லும் போது தலைக்கு அருகில் ஒரு டம்ளர் தண்ணீர் வைத்து கொண்டு தூங்கவும். அப்படி செய்வதன் மூலமாக காலையில், சோர்வு, மன அழுத்தம் நீங்கியிருப்பதை உணரலாம். அந்த தண்ணீரை வெளியில் அல்லது மரத்தின் மீது ஊற்றி விட வேண்டும். ஆனால், அந்த தண்ணீரை மட்டும் குடிக்க கூடாது.

காரணமே இல்லாமல் பய உணர்வு இருந்து கொண்டு இருந்தால், வலது கையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி வர பய உணர்ச்சிகள் குறையும். வாழவே பிடிக்காமல் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்கள் இருந்து கொண்டே இருந்தால் வெள்ளி கம்பியால் மூக்கில் சிறு துளை போட அந்த எண்ணங்கள் மாறும். ஆண்களும் செய்யலாம். ஆனால், மூக்குத்தி அணிய வேண்டும் என்று அவசியமில்லை.

வண்டி, வாகனங்களில் பயணம் செய்யும் பொழுது சிறிது காகிதப் பூ எடுத்துச் செல்ல விபத்துக்கள் ஏற்படாது. காலை எழுந்ததும் தங்க நாணயம் அல்லது தங்கங்கள் நிறைந்த படம், ரூபாய் நோட்டுகள் நிறைந்த படம் ஒன்று பார்த்து வர செல்வ வளம் அதிகரிக்கும். இட து கை கீழே இருக்கும்படி தூங்கினால் ஆயுள் விருத்தியாகும். எப்போதும் வீட்டைச் சுற்றி நீரோட்டங்கள் இருந்தாலோ, செயற்கையாக அமைத்துக் கொண்டாலோ பணப்புழக்கம் உயரும்.

சமையலறையும், படுக்கையறையும் அருகருகில் இருக்கும்படி அமைத்துக் கொண்டால் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டு வாசலில் மருதாணி கொத்தை தொங்கவிட்டால் துர் சக்திகள் அண்டாது.