வாழ்வில் ஜெயிக்க கன்னி ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரம்!

150

வாழ்வில் ஜெயிக்க கன்னி ராசியினர் செய்ய வேண்டிய பரிகாரம்!

ராசி மண்டலம் என்பது மேஷ ராசியில் தொடங்கி மீன ராசியில் முடிவடைகிறது. ராசி கட்டத்தில் உள்ள வீட்டிற்கும் ஒரு அதிபதி உள்ளது. அந்த வகையில் ராசி கட்டத்தில் வரும் 6ஆவது ராசி கன்னி ராசி. இந்த ராசிக்கு புதன் பகவான் அதிபதியாக இருக்கிறார். சிறந்த அறிவாற்றலும், பல கலைகளை கற்றுக்கொள்ளும் திறனும் கொண்டவர்கள் கன்னி ராசியினர். இவர்கள், தங்களது வாழ்வில் ஜெயிக்க, மிகுந்த யோகங்களையும், அதிர்ஷ்டங்களையும் பெறுவதற்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

நவக்கிரகங்களில் உள்ள புதன் பகவானுக்குரிய கோயில் மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயில். ஆண்டுதோறும் இந்த கோயிலுக்கு சென்று புதன் பகவானை வழிபடுவது சிறந்த பலனை அள்ளித்தரும். மேலும், ஒவ்வொரு புதன் கிழமையும் பச்சை நிற ஆடைகளை அணிந்தால், யோகங்கள் உண்டாகும். இவ்வளவு ஏன், தாய்மாமன்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது கன்னி ராசியினரின் புதன் கிரக தோஷங்களை நீக்கும்.

பெருமாளுக்கு பிடித்த கிழமை புதன். இந்த நாளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாள் மற்றும் தாயாருக்கு பச்சை நிற வஸ்திரங்கள் சாற்றி வழிபடுவது அதிர்ஷ்டங்களை ஏற்படுத்தும். மேலும், வளர்பிறபு புதன் கிழமை நாளில் பிராமணருக்கு அன்னதானம் அல்லது ஆடை தானம் செய்வது கன்னி ராசியினருக்கான தோஷங்களை நீக்கி அவர்களை வாழ்வில் ஜெயிக்க வைத்து அவர்களுக்கு தேவையான யோக பலன்களையும், அதிர்ஷ்டங்களையும் அள்ளித்தரும் என்பது நம்பிக்கை.