வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம்!

104

வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம்!

ஒவ்வொருவரது வாழ்விலும் சொந்தமாக வீடு கட்டுவது என்பது கனவாக இருக்கும். அதுவும், கிராமங்களிலும் கூட வீடு வாங்கி கட்டிவிடுவார்கள். ஆனால், சென்னை போன்ற சிட்டிகளில் வீடு கட்டுவதென்பதும், கட்டிய வீட்டில் குடியிருப்பது என்பதும் ரொம்பவே கஷ்டம். ஒவ்வொரு வீடும் வாஸ்து சாஸ்திரப்படி தான் கட்ட வேண்டும். அப்படியில்லை என்றால் நிம்மதி இல்லாமல் போகும் சூழல், கஷ்டப்படும் நிலை வரும்.

சரி, வீடுகளில் உள்ள அனைத்து வாஸ்து பிரச்சனைகள் நீங்க எளியமையான பரிகாரங்கள் குறித்தும், மந்திரங்கள் குறித்தும் பார்ப்போம்.

வாஸ்து காயத்திரி மந்திரம்:

ஓம் அனுக்ரகரூபாய விதமஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ ரசோதயாத்

வாஸ்து பரிகாரங்கள்:

  1. ஒவ்வொரு நாளும் வாஸ்து காயத்திரி மந்திரத்தை 27 முறை சொல்லி வந்தால் வீட்டிலுள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும்.
  2. வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சையில் தீபம் ஏற்றுவது நல்லது. எலுமிச்சை பழத்திலுள்ள சாறை பிழிந்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம்.
  3. திருநாகேஸ்வரம் சென்று ராகு காலத்தில் ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.
  4. பௌர்ணமி நாளில் அழகர் கோயிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு.
  5. காளஹஸ்தி சென்று சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு அதன் பின்னர், ராகுவுக்கு நாக சாந்தி பரிகாரம் செய்து கொள்வது நல்லது.
  6. ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.