வீட்டின் எதிர்மறை அதிர்வுகளை நீக்கும் பரிகாரம்

123

வீடுகளில் எதிர்மறை அதிர்வுகள் நீங்கி, தெய்வீக சக்திகள் நிரம்பினால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் வளமையான வாழ்க்கை பெற வழிவகை செய்யும். அப்படி நாம் வசிக்கும் வீடு தெய்வங்களின் அருட்கடாட்சம் பெறுவதற்கு செய்யவேண்டிய ஒரு எளிய பரிகார முறை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

தங்க நகை விற்பனை செய்யும் கடைகளில் பஞ்சலோக நாணயங்கள் விற்பனைக்கு கிடைக்கும். அந்த பஞ்சலோக நாணயங்களை வாங்கி வந்து, ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் நல்ல நேரத்தில் வீட்டின் வாயில் படிக்கு மேலே, கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்படும் போது பயன்படுத்தப்படும் அஷ்டபந்தன மூலிகை கலவையை சிறிதளவு வாங்கி வந்து, சூடாக்கி அதை வீட்டு வாயிற்படியில் மீது தடவி, இந்த பஞ்சலோக நாணயங்களை நேரான வரிசையில் ஒட்டி வைக்க வேண்டும். 

பஞ்சலோக நாணயங்களை ஒட்டுவதற்கு அஷ்டபந்தன மூலிகை மருந்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, நவீன ரசாயன கலவை கொண்டு செய்யப்பட்ட ஒட்டுப் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஒட்டக்கூடாது. பஞ்சலோக நாணயங்களை வீட்டு வாயிற்படியில் ஒட்டுவதால் வீட்டில் இருக்கின்ற எப்படிப்பட்ட வாஸ்து தோஷங்களும் நிவர்த்தி ஆவதோடு, அதனால் வீட்டில் வசிப்பவர்களுக்கு பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் காக்கும். வசிக்கும் வீட்டில் அற்புதமான தெய்வீக ஆற்றல் பெருகுவதோடு, அந்த ஆற்றல் அங்கு வசிப்பவர்களின் உடல் மற்றும் மனதை மேம்படுத்தி அனைத்து நன்மைகளையும் வாழ்வில் பெறுவதற்கு உதவுகிறது. 

வீட்டில் இருப்பவர்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லவிதமாக நிறைவேறும். குறிப்பாக வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கூடிய சீக்கிரம் சொந்த வீட்டிற்கு குடிபுகும் யோகத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே வீட்டில் இருக்கின்ற துஷ்ட சக்திகள், எதிர்மறை அதிர்வுகள் அனைத்தும் நீங்கும். மிக அதிக அளவில் செல்வச் சேர்க்கையும் ஏற்படும்.