வீட்டிலுள்ள கெட்ட சக்தியை விரட்ட எளிய பரிகாரம்!

80

வீட்டிலுள்ள கெட்ட சக்தியை விரட்ட எளிய பரிகாரம்!

நாம் அனைவருமே எப்போதும் நினைக்க கூடிய ஒரு விஷயம் தான் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் ஒற்றுமை , சந்தோஷம் இருக்க வேண்டும் என்று. ஆனால் சில இடங்களுக்கு சென்றாலே நிம்மதியை இழந்து விடுகிறோம்.

அதுபோல நம் வீடுகளிலும் நம்மால் சில நேரங்களில் ஒற்றுமையாக வாழ முடிவதில்லை. ஏன் தெரியுமா? நீங்கள் இதுகுறித்து எப்போதாவது சிந்தித்து பார்த்து இருக்கிறீர்களா? ஆம், ஆன்மீக ரீதியாக இதற்கு சில விளக்கங்கள் உள்ளன. மேலும் இந்த ஒற்றுமையை கெடுக்கும் சக்தியை ஒரு சிறிய வீட்டில் உபயோகப்படுத்தும் பொருளை வைத்து எப்படி கண்டறிவது என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவருடைய வீட்டில் அதிகமாக குழப்பங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது எதிர்மறை ஆற்றல்கள் தான். எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள் மற்றும் உறவுகளின் இடையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே உங்கள் வீட்டில் தீய சக்திகள் உள்ளதா என்பதை உறுதி செய்வதற்கு, ஒரு கண்ணாடி டம்ளர் மற்றும் சிறிதளவு கல் உப்பு எடுத்து கொள்ளுங்கள்.

இந்த கண்ணாடி டம்ளரில் கால் பங்கு அளவிற்கு கல் உப்பு போட்டு பின் அந்த டம்ளர் முழுவதும் தண்ணீரால் நிரப்பி எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இந்த டம்ளரை வைத்து விடுங்கள். வைத்த பிறகு இந்த டம்ளரை தொடக்கூடாது. ஒருநாள் இப்படியே விடுங்கள். அடுத்தநாள் அந்த டம்ளரைப் பார்க்கும் போது, உப்பு நீரில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால் அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம்.

ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால் ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து அறையில் மறைமுகமாக வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல் தூக்கி எறிந்து விடுங்கள். இப்படி செய்து வந்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எளிமையாக வெளியேற்றலாம்.

வெளியே செல்லும் போது எதிர்மறை ஆற்றல் தாக்குவதை எப்படி அறிவது?

நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எதிர்மறை ஆற்றல் நம்மை தாக்காமல் இருக்க மூன்று பச்சை எலுமிச்சைப் பழங்கள் போதுமானது. இந்த எலுமிச்சையை வைத்து நீங்கள் செய்ய வேண்டியது ஒரு பச்சை எலுமிச்சையை பாக்கெட்டில் அல்லது கை பையில் வைத்துக் கொள்ளுங்கள். வெளியே போய் வந்ததும் அந்த எலுமிச்சையை பார்க்கும் போது அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி அதிக எதிர்மறை ஆற்றல் வந்துள்ளது என்று அர்த்தமாகும்.