வீட்டில் காசு, பணம் குறையால் இருக்க வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய மிளகு பரிகாரம்!

135

வீட்டில் காசு, பணம் குறையால் இருக்க வியாழக்கிழமையில் செய்ய வேண்டிய மிளகு பரிகாரம்!

வாழ்க்கையில் அனைவருக்குமே தேவையாக இருப்பது காசு, பணம். தேவைகள் நிறைவேற பணம் அவசியம். பெரும்பாலானோர் வாழ்க்கையில் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதே பணம் தான். எப்பொழுது உங்களுக்கு பணத்தேவை அதிகரிக்கிறதோ பணம் தேவைக்கு குறைவாக வருகிறதோ அப்பொழுது சந்தோஷமாக இருக்கக்கூடிய வீடுகளில் பிரச்சனைகள் ஆரம்பிக்கிறது.

சராசரியாக வந்து கொண்டிருக்கக்கூடிய பணம் கூட சில நேரங்களில் நமக்கு சரியாக வராமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் நமக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது. கடன் தொல்லை ஆரம்பிக்கிறது. வரும் பணத்தை விட தேவைக்கு அதிகமாக செலவு இருக்கும் பொழுது பிறரிடம் நாம் கடன் வாங்க ஆரம்பிக்கிறோம். அதன்பிறகு இந்த கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு சமயத்தில் அது பெரிய பிரச்சனையாக மாறிவிடுகிறது.

வேண்டுமென்றே நாம் யாரிடமும் கடன் வாங்குவதில்லை. இந்த மாதம் நம்முடைய தேவைக்கு பணம் வரவில்லை. அதனால் அடுத்த மாதம் நம்முடைய தேவைக்கு பணம் வந்துவிடும் என நினைத்துக்கொண்டு பணம் வாங்குகிறோம். ஆனால் ஒவ்வொரு மாதமும் இப்படி தள்ளிக்கொண்டே பணம் நம்மிடம் வராமல் போகிறது. இதனால் தொடர்ந்து கடன் அதிகரிக்கிறது. ஏற்கனவே வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இருக்கிறது. கூடவே மேலும் மேலும் கடன் வாங்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறோம். இந்த நேரங்களில் நம்முடைய மனதும் சந்தோஷமாக இருப்பதில்லை.

இப்படி வரக்கூடிய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து பணத்தை தரக்கூடிய பல எளிய பரிகாரங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான பரிகாரத்தை பற்றி இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். என்னதான் கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்தாலும் சரி ஒரு சில நேரங்களில் நம்மிடம் பணம் தங்காது. இதற்கு கண் திருஷ்டியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இப்படி நமக்கு ஏற்படக்கூடிய கண்திருஷ்டி மாறினால் நம்மிடம் வரக்கூடிய பணத்தை ஓரளவிற்கு நிலையாக வைத்துக் கொள்ளலாம். இந்த கண் திருஷ்டி பலருடைய வாழ்க்கையில் முன்னேற்றத்தை தடுக்கிறது. அப்படி பணம் வரவிடாமல் செய்யக்கூடிய கண் திருஷ்டியை போக்க கூடியது 5 மிளகு. இந்த நல்லமிளகு பல்வேறு அற்புதமான அதிசயமான பலன்களை கொண்டுள்ளது. பலருக்கும் இந்த நல்லமிளகின் அதிசய ஆற்றல் பற்றி தெரியாது. இந்த நல்லமிளகிற்கு எப்படிப்பட்ட கண்திருஷ்டியாக இருந்தாலும் அந்த கண் திருஷ்டியை போக்க கூடிய அதிக அளவு சக்தி இருக்கிறது.

இந்த மிளகின் சக்தியை பற்றி பலரும் அறிந்திருப்பார்கள். இதைப் பற்றி தெரியாத உங்களுக்கு இது நல்ல பலனைக் கொடுக்கக் கூடிய ஒன்று. இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் அடைந்த பலரும் சொல்லிய பிறகே இந்த தகவல் உங்களுக்கு சொல்லப்படுகிறது. நம்பிக்கையோடு நீங்கள் செய்தால் மிக நல்ல பலனைக் கொடுக்கக் கூடியது.

கண்திருஷ்டியை போக்குவதற்கு ஒரு 5 மிளகை எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒவ்வொரு நபருக்கும் 5 மிளகு என உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்றபடி ஐந்து, ஐந்து மிளகை எடுத்துக்கொள்ள வேண்டும்.

முதலில் இந்த பரிகாரத்தை வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அதாவது வீட்டின் தலைவர் அல்லது வெளியில் யார் வேலைக்கு செல்கிறார்களோ அவர்களுக்கு முதலில் இதை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை நீங்கள் ஞாயிற்றுக்கிழமை அல்லது வியாழக்கிழமையில் மட்டுமே செய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே இது அதிக பலனைக் கொடுக்கும். வியாழக்கிழமையில் மாலை 6.30 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டு வாசலில் வந்து நின்று இந்த 5 மிளகை உங்கள் உள்ளங்கையில் வைத்து கொண்டு உங்களுடைய தலையை சுற்ற வேண்டும்.

உங்களுடைய தலையை சுற்றி இடது புறமாக மூன்று முறை, வலது புறமாக மூன்று முறை சுற்ற வேண்டும். இருபுறமும் உங்களுடைய தலையை சுற்றிய பிறகு நீங்கள் எந்த திசை பார்த்து நிற்கிறீர்களோ அந்த திசை தொடங்கி நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு மிளகை எடுத்து எறிய வேண்டும். கிழக்கு திசை பார்த்து நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றால் கிழக்கு திசையில் இருந்து ஆரம்பித்து, மேற்கு, வடக்கு, தெற்கு என ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு மிளகை ஏறிய வேண்டும். இப்பொழுது உங்களுடைய கையில் மீதம் ஒரு மிளகு இருக்கும். இந்த மிளகை நீங்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து மேலே வானத்தை பார்த்து நேராக தூக்கி எறிய வேண்டும்.

பார்ப்பதற்கு மிக எளிய பரிகாரம் போல் இருக்கும். ஆனால் மிக அதிக சக்தியைக் கொண்டது. அதிக பணத்தை ஈர்க்கக்கூடியது. கண்திருஷ்டியை மிக வேகமாகப் போக்க கூடியது. உங்களை நல்ல சந்தோஷமாக வைக்கக்கூடியது. இதை செய்து பார்த்த பலரும் சொல்லியிருக்கிறார்கள். நல்ல பலன் கிடைத்திருக்கிறது என. தொடர்ந்து நீங்கள் இதை செய்து பாருங்கள் நிச்சயமாக உங்களுக்கு இது அதிக அளவில் நல்ல பலனை கொடுக்கும். நீங்கள் நம்பிக்கையோடு இதை செய்து வந்தால் நிச்சயமாக நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய கடன் தொல்லை கஷ்டங்கள் எல்லாம் நீங்கி பணம் தொடர்ந்து உங்கள் கையில் வந்து சேரும்.