வீட்டில் சுபிட்சம் பெருகிட சம்பளம் வாங்கிய உடன் முதலில் செய்ய வேண்டிய பரிகாரம்!

230

வீட்டில் சுபிட்சம் பெருகிட சம்பளம் வாங்கிய உடன் முதலில் செய்ய வேண்டிய பரிகாரம்!

நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு பணத்தை சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். வாங்கிய சம்பளம் எவ்வளவு முக்கியமோ! அதே அளவிற்கு சம்பளம் வாங்கும் ஒவ்வொரு முறையும் முதல் செலவு செய்யும் பொழுது கவனமாக பார்த்து செய்வதும் முக்கியமாகும். சம்பளம் வாங்கியவுடன் முதல் வேலையாக இந்த பொருட்களுக்கு செலவு செய்தால் வீட்டில் சுபிட்சம் நிலைத்து நிற்கும் என்கிறது சாஸ்திரம். அப்படி சம்பளம் வாங்கியவுடன் வாங்க வேண்டிய முதல் பொருள் என்னவாக இருக்கும்? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க…

ஒவ்வொரு மாதமும் நீங்கள் சம்பளம் வாங்கும் பொழுது பணத்தை உள்ளங்கையில் வைத்து கொண்டு, மகாலட்சுமி படத்தை பார்த்து இந்த பணம் நல்ல வழியில் செலவாக வேண்டும், வீண் விரயங்கள் ஏற்படக்கூடாது என்று மனமார மகாலட்சுமி தாயாரிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

சம்பளம் வாங்கிய உடன் மகாலட்சுமிக்கு உகந்த மல்லிகை பூக்களை வாங்கி வீட்டில் வைத்து பூஜை செய்து வரவும். இப்படி செய்வதால் மகாலட்சுமியின் பூரண அருள் உங்களுக்கு இருக்கும். மாத சம்பளம் கிடைத்தவுடன் வீட்டிற்கு இனிப்புகள் வாங்கி செல்லுங்கள். வீட்டிற்கு இனிப்பு வாங்கி செல்வது என்பது சுபச்செலவு.

பின்னர் அதிலிருந்து ஒரு சிறு தொகையை எடுத்து வாங்க வேண்டியது மஞ்சள் ஆகும். மஞ்சள் கிழங்கு அல்லது மஞ்சள் தூள் எதுவாக இருந்தாலும் வாங்கலாம்.

மஞ்சள் மங்களகரமான பொருட்களில் ஒன்று. மேலும் குடும்பத்தில் சுபிட்சத்தை கொடுக்கக் கூடியதாகும். மஞ்சள் தூளை வாங்கி வந்து எவர் சில்வர் டப்பாவில் போட்டு நான்கைந்து மிளகுகளை சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் வண்டுகள் வராமல் இருக்கும். சமையலுக்கு இல்லை என்றாலும், சாமிக்கு வாங்கும் மஞ்சள் கூட வாங்கலாம். ஏதாவதொரு முறையில் மஞ்சள் வாங்குவது நல்லது.

மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது பசு என்பது எல்லோருக்கும் தெரியும். சம்பள பணத்திலிருந்து முதல் தொகையை எடுத்து பசுமாட்டில் இருந்து தயாரிக்கப்படும் ஏதாவதொரு பொருளை வாங்குங்கள். பசுமாட்டில் இருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், வெண்ணெய் இப்படி எந்த பொருளை வாங்கினாலும் சரிதான்.

சம்பளம் வாங்கிய கிழமை வெள்ளிக்கிழமையாக இருந்தால் அன்று வாங்க வேண்டிய மிக முக்கியமான பொருட்களில் கல் உப்பும் ஒன்று. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் என்பதால் வெள்ளிக்கிழமையில் கல் உப்பு வாங்குவது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கும். அதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உப்பு வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

கல் உப்பு, பால் பொருட்கள், இனிப்பு, மஞ்சள் ஆகிய இந்த நான்கு விஷயங்களில் எது உங்களால் முடியுமோ! ஒவ்வொரு மாதமும் அதனை முதல் செலவாக செய்து வந்தால் வீடு முழுவதும் மகாலட்சுமி கடாட்சம் நிரம்பி, வரவுக்கு மிஞ்சிய செலவுகள் எல்லாம் நடைமுறையில் இருந்து மாறி சேமிப்பு வளரும். செல்வம் பெருகும்..