வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

265

வீட்டில் செல்வம் சேர செய்ய வேண்டிய பரிகாரம்!

  1. வீட்டில் விளக்கு எற்றும் போது 2 காமாட்சி விளக்கில் நெய் தீபம் ஏற்றினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
  2. வெள்ளைப் புறாக்கள் வளர்த்தால் பணத் தட்டுப்பாடு நீங்கும்.
  3. குபேரனுக்கு ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்பதால், வீட்டில் பலவிதமான, வகை வகையான ஊறுகாய் வைத்திருக்க வேண்டும்.
  4. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் குடிக்க தண்ணீர் தர வேண்டும். அதன் பின்னர், மஞ்சள் குங்குமம் தர வேண்டும். இதனால், ஜென்ம ஜென்மமாக இருந்த தரித்திரம் நீங்கும்.
  5. அமாவாசை நாளில் பித்ருக்களை வழிபட வேண்டும்.
  6. வீட்டில் விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் ஆகியவற்றை வெளியேற்றக் கூடாது. அப்படி செய்தால் நம்மிடமுள்ள காசு, பணம் வந்து வழியே சென்றுவிடும்.
  7. இறை பக்தியில் இருப்பவர்களிடம், மஹான்களின் ஆசி பெறுவது புண்ய பலம் கூடும். பண வரவும் அதிகரிக்கும்.
  8. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று சுக்ர ஓலையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிட்டு வர பணப்புழக்கம் அதிகரிக்கும்.
  9. பசு கோமியத்தை தினந்தோறும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும். வீட்டிலும் தெளித்துவிட வேண்டும். தொடர்ந்து 45 நாட்களுக்கு இப்படி செய்து வர தரித்திரம் நீங்கி பண வரவு அதிகரிக்கும்.
  10. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு மறுநாள் பறவைக்கும், பசுவிற்கும் அளித்திட வேண்டும். இப்படி செய்து வர பணத் தடை நீங்கும்.