வீட்டுல ஒரே சண்டை, சச்சரவா இருக்கா? அப்போ இதை செய்து பாருங்க!

76

வீட்டுல ஒரே சண்டை, சச்சரவா இருக்கா? அப்போ இதை செய்து பாருங்க!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். சிலருக்கு பணப் பிரச்சனை இருக்கும். சிலருக்கு கணவனாலும், சிலருக்கு மனைவியாலும் பிரச்சனை இருக்கலாம். இன்னும் சிலருக்கு பெற்றோர்களாலும், ஒரு சிலருக்கு பிள்ளைகளாலும் பிரச்சனைகள் வரலாம். அக்கம் பக்கத்தினர், உறவினர் வழியில் என்று பிரச்சனைக்கு வழிகாட்டியாக இருப்பவர்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரே குடும்பத்திற்குள்ளாக சண்டை, சச்சரவுகள், நிம்மதி இல்லாமல் இருப்பது ஆகியவை இருக்கும். இதெல்லாம் சரியாக என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருப்பவர்களுக்கு மிகவும் எளிமையான பரிகாரமாக இதனை செய்து பார்க்கலாம்.

ஒரு தேங்காயை எடுத்து, அதனை உடைத்து வீட்டு வாசலில் காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் வைக்க வேண்டும். மாலையில் அந்த தேங்காயை எடுத்துப் பார்த்தால் அதன் உட்புறம் ஒரு மாதிரி பிசுபிசு என்று இருக்கும். அந்த தேங்காயை எதற்கும் பயன்படுத்தாமல், வெளியில் இருக்கும் குப்பைத் தொட்டையில் தூக்கி எறிந்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீட்டிற்கு வந்துவிட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலமாக வீட்டில் சண்டை, சச்சரவுகள் இருக்காது. எப்போதும் குடும்பத்தில் நிம்மதியும், ஒற்றுமையும் பலப்படும்.