வேலை கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

313

வேலை கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வேலை தான் பிரதானம். வேலை தான் ஒருவரது அந்தஸ்து, கௌரவம், பேர், புகழ் ஆகியவற்றை தீர்மானிக்கிறது. சமூகத்தில் கிடைக்கும் மதிப்பும், மரியாதையும் அவர் செய்யும் வேலையைப் பொறுத்து தான் தீர்மானிக்கப்படுகிறது. எல்லோருக்கும் ஏதோ ஒரு வேலை கிடைத்து விடும். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், பிடித்த வேலை கிடைக்குமா என்பதுதான் இங்கு கேள்வியாக அமைகிறது. அதற்கு செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

வேலை கிடைக்க, வேலையிலுள்ள பிரச்சனைகள் தீர ஸ்ரீ பைரவரை ஞாயிறு தோறும் தொடர்ந்து 9 வாரங்கள் வழிபட வேண்டும். கடைசி வாரத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட உடனடியாக பலன் கிடைக்கும்.

அரியக்குடி தென் திருவேங்கட முடையானுக்கும், தாயாருக்கும் 12 வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட விரும்பிய வேலை கிடைக்கும்.

ராமநாதர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயில் ஆகிய கோயிலுக்கு சென்று வழிபட வேலை கிடைக்கும்.

காலை குளித்து முடித்ததும் சிறிது கல் உப்பு எடுத்து தலையை வலது புறமாய் 24 முறை சுற்றி பின்பு அதனை வாசலில் எறிந்துவிட்டு, மீண்டும் வீட்டில் வந்து சிறிது கல் உப்பை பேப்பரில் எடுத்து தங்களின் பர்சில் வைத்திருக்க வேண்டும். இதனை ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டிய பரிகாரம். வேலை கிடைத்ததும், அந்த உப்பை தூர எறிந்து விட வேண்டும்.

புள்ளிகள் இல்லாத ஒரு எலுமிச்சை எடுத்து 13 முறை தலையை சுற்றி பின்பு அதனை 4 துண்டாக வெட்டி 4 தெருக்கள் இணையும் இடத்தில் திக்கிற்கு ஒன்று வீதம் எறிந்துவிட வேண்டும். இது தொடர்ந்து முதல் நாள் செய்த அதே நேரத்தில் என்று தொடர்ந்து 7 நாட்கள் செய்ய வேண்டும். இது வேலை இல்லாதவரின் எதிர் மறை சக்திகளை அழித்து தடைகள் நீங்க வழி செய்யும்.

அரச மரத்திற்கு தொடர்ந்து 43 நாட்கள் வேரில் நீர் விட்டு வந்தால் நினைத்த வேலை கிடைக்கும். அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடலாம். பைரவருக்கு 27 மிளகுகளை கருப்பு துணியில் கட்டி நல்லெண்ணெய் அல்லது இல்லெண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் நல்ல வேலை கிடைக்கும்.

வேலை கிடைக்க சொல்ல வேண்டிய மந்திரம்:

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா

விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ

ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷிமீச சுந்தரீ

தினந்தோறும் இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதோடு, வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும்.