3 மாதத்தில் திருமணம் நடைபெற இதோ பரிகாரம்!

258

3 மாதத்தில் திருமணம் நடைபெற இதோ பரிகாரம்!

பொதுவாக ஒரு சில ஜாதர்கர்களுக்கு 30 வயதுக்கு அதிகமாகியும் திருமணம் நடைபெறாமல் இருக்கும். ஒரு சிலருக்கு மாங்கல்ய தோஷம் இருக்கும். சில ஜாதகர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பே இருக்காது. அப்படிப்பட்டவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள், சென்று வர வேண்டிய கோயில்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க: ஆடி மாதம் வாகனம் வாங்கலாமா?

திருமண தடை நீங்க சென்று வர வேண்டிய கோயில்கள்:

  1. காளஹஸ்தி திருக்கோயில்
  2. திருமணஞ்சேரி திருக்கோயில்
  3. ஆயக்காரன்புலம் அய்யனார் கோயில்

இனி ஒவ்வொரு கோயிலாக பார்ப்போம்.

காளஹஸ்தி திருக்கோயில்:

தஞ்சாவூர் மாவட்டம் கத்திரிநத்தம் என்ற கிராமத்தில் இந்த காளஹஸ்தி திருக்கோயில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த கோயிலுக்கு திங்கள் கிழமைகளில் தான் அதிகளவில் பக்தர்கள் வருகின்றனர்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் ராகு கால வேலையில் காலை 7.30 மணி முதல் 9 வரையில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். அந்த நேரத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்கள், கன்னியர்கள் அல்லது அவர்களின் பெற்றோர்கள் மகள் அல்லது மகனின் ஜாகத்தை அர்ச்சனை தட்டில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

அப்படி செய்தால், அந்த ஜாதகர்களுக்கு 3 மாதங்களில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அப்படி திருமணம் நடக்கும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மிதுனம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

திருமணஞ்சேரி திருக்கோயில்:

திருமணஞ்சேரியில் உள்ள சப்தகிரி தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு மூலவரான கல்யாண சுந்தரருக்கு மாலை அணிவிக்க வேண்டும். அதன் பின் தீபம் வைக்கப்பட்டுள்ள மேடையில் 5 தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். அப்போது கொடுக்கப்படும் எலுமிச்சை பழத்தை உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து அப்படியே குடிக்க வேண்டும்.

விரிவாக படிக்க: திருமண வரம் கை கூடி வர சென்று வர வேண்டிய ஸ்தலம் திருமணஞ்சேரி!

திருமணம் ஆகாமல் தவிக்கும் ஆண்களும், பெண்களும் மணக்கோலத்தில் வந்து மூலவரை தரிசனம் செய்ய வேண்டும். அப்படி செய்தல் கூடிய விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மேலும், ராகு தோஷம் உள்ளவர்களும் இந்த திருத்தலத்திற்கு வருகை தந்து ராகு பகவானை வணங்கி வர ராகு தோஷம் நீங்கும். அதோடு, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களும் புனித நீராடி ராகு பகவானை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆயக்காரன்புலம் அய்யனார் கோயில்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகிலுள்ள ஆயக்காரன்புலம் என்ற கிராமத்தில் தான் இந்த கலிதீர்த்த அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருக்கும் பூசாரி தான் கலிதீர்த்தான். அருள் வாக்கு சொல்லும் இந்த பூசாரி கலிதீர்த்தான், இந்த தேதியில் இந்த குழந்தை பிறக்கும் என்று கணித்து சொல்வாராம். அவரிடம் அருள் வாக்கு கேட்கவே செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்குமாம்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: செல்வம் சேர பூஜையறையில் சொல்ல வேண்டிய மந்திரம்!

குழந்தை வரம் வேண்டி வரும் தம்பதியினருக்கு இந்த தேதியில், இந்த மாதத்தில் இந்த குழந்தை பிறக்கும் என்று அருள் வாக்கு சொல்கிறார் கலிதீர்த்தான். அதன்படியே குழந்தை பெற்றெடுக்கும் தம்பதியினர், அந்த கோயிலுக்கு வந்து குழந்தை சிலையை வைத்து வணங்கிவிட்டு செல்கின்றனர்.