8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்

97

திருவண்ணாமலையை சுற்றி உள்ள 8 லிங்க கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலே கோடி புண்ணியம் பெற்றதற்கு சமமாகும்.

வானுயர ஓங்கி வளம்பெற விளங்கும் மலையினை அண்ணாமலை அண்ணலின் புனித திருவடியாகவே மக்கள் போற்றி வணங்குவர். மலையை சுற்றி வரும் பக்தர்கள் ஆதி வாரத்தில் சிவபதமும், சோம வாரத்தில் தேவேந்திர வாழ்வும், மங்கல வாரத்தில் பிறவிப் பிணி நீங்கிய பெரு வாழ்வும், புதன் வாரத்தில் தேவராகும் தகுதியும், குருவாரத்தில் முனிவர்க்கம் மேலான பதவியும், சுக்ர வாரத்தில் விஷ்ணு பதமும், சனி வாரத்தில் நவக்கிரக பலனும் பெறுவர்.

மலையை சுற்றி உள்ள 8 லிங்க கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலே கோடி புண்ணியம் பெற்றதற்கு சமமாகும். மலைப் பிரஹாரத்தில் சக்கர தீர்த்தம், அக்னி தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் உள்பட 360-க்கும் மேற்பட்ட தீர்த்தங் களும் உள்ளன. பால தீர்த்தம், சிம்ம தீர்த்தம், எமதீர்த்தம், சோணநதி, உண்ணாமலை தீர்த்தம், வருண தீர்த்தம், அசுவினி தீர்த்தங்களும் உள்ளன. வழிநெடுக உள்ள கோவில்களுக்கும் புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

அண்ணாமலையாரை தரிசித்து அருளாசியை பெறுவோம்