அம்மனுக்கு செய்யும் அபிஷேகம் பிரச்சனைகளை தீர்க்கும்

243

அம்மனுக்கு செய்யும் அபிஷேகங்கள் நல்ல பலனைத்தரக்கூடியவை. அந்த வகையில் எந்த பொருளில் அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.

அம்மனுக்கு செய்யும் அபிஷேகம் பிரச்சனைகளை தீர்க்கும்* வில்வ இலைகளால் அம்மனை பூஜித்தால், இம்மையிலும் மறுமையிலும் மகிழ்ச்சி கிடைக்கும்.

* கற்பூரம், கஸ்தூரி, அகில், குங்குமப்பூ ஆகியவற்றுடன் சந்தனம் கலந்து, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தால், பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.

* லட்சுமி தேவிக்கும், சரஸ்வதி தேவிக்கும் மாம்பழச் சாறு கொண்டு அபிஷேகம் செய்தால், அழியா புகழ் பெறலாம்.

* ரத்தினங்களைச் சமர்ப்பித்து தேவியை ஆராதிப்பவர், குபேரனாக மாறுவார்.

* பூக்களைக் கொண்டு அம்மனை பூஜிப்பவருக்கு, கயிலாய வாசம் கிடைக்கும்.

* அம்பாளுக்கு ரோஜா மாலை சமர்ப்பித்து வழிபட்டால், நினைத்த காரியம் உடனே நிறைவேறும்.

 

* வேப்பிலை மாலை அணிவித்து வழிபட்டால், நீண்ட நாளாக குணமாகாத பிணிகள் கூட நீங்கிவிடும்.