பிரிந்த தம்பதியை சேர்த்து வைக்கும் அரங்கநாதர்

450

ஸ்ரீரங்கம் பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், பிரிந்து நிற்கும் கணவன்- மனைவி, பிற உறவுகள் ஒன்றுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம். இதுவே திருவரங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. சைவர்களுக்கு பெரிய கோவில் என்றால் ‘சிதம்பரம்’, வைஷ்ணவர்களுக்கு பெரிய கோவில் என்றால் திருவரங்கம்.

ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் கொண்ட கோவில். 21 கோபுரங்களையும், 7 பிரகாரங்களையும், 42 உப சன்னிதிகளையும், 8 உப கோபுரங்களையும் கொண்ட ஆலயம் இது. வைணவத் திருப்பதிகளில் முதல் இடம் வகிப்பது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில் இது.

பில்லி, சூனியம் விலக சக்கரத்தாழ்வாருக்கு 9 வாரங்கள் வியாழக்கிழமைகளில் கல்கண்டு, பேரிச்சை வைத்து ஆராதனை செய்து வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.

அகத்திய முனிவரின் சாபத்தால் அவரது கமண்டலத்தில் சிறைபட்டு துன்பப்பட்டாள் காவிரித் தாய். அந்த துன்பத்தில் இருந்து விடுபட, இங்குள்ள உத்திரவாகினியில் நீராடி சமுத்திரராஜனை சென்றடைந்ததாக செவி வழி ஒன்று சொல்லப்படுகிறது.

இத்தலத்து பெருமாளையும் தாயாரையும் வணங்கினால், பிரிந்து நிற்கும் கணவன்- மனைவி, பிற உறவுகள் ஒன்றுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வடரங்கம். ஆலயத்திற்குச் செல்ல நகரப் பேருந்துகள் ஏராளமாக உள்ளன. ஆலயம் அருகிலேயே இறங்கிக் கொள்ளலாம்.