சந்திர தோஷம், தீராத நோய் தீர்க்கும் அருமருந்தம்மை

208

சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சந்திர தோஷம், தீராத நோய் தீர்க்கும் அருமருந்தம்மை
சந்திர தோஷம், தீராத நோய் தீர்க்கும் அருமருந்தம்மை
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் ” திருந்துதேவன்குடியின் ” நாயகி, தீரா நோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இத்தல இறைவி அருமருந்தம்மை, தீராத நோய்களை தீர்ப்பவள் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு, அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய், வேண்டுவோர்க்கு பிரசாதமாகப் பின்னர் வழங்கப்படுகிறது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய், சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும்வண்ணம், வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப்போல் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சந்திரன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கப்பெற்றான். ஆகையால், சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்குத் தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலையில் இருக்கிறார். எல்லாவகையான யோகங்களும் கிடைக்க வழிபட வேண்டிய தோஷ பரிகார சந்திரன் இவர். குறிப்பாக, கடக ராசிக்காரர்கள் (புனர்பூசம், பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்) இக்கோவிலுக்கு வந்து வழிபட்டால், அனைத்து தோஷங்களில் இருந்தும் நிவாரணம் பெறலாம். இத்தலத்தில் தேவர்களின் வைத்தியரான தன்வந்திரிக்கும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.