சித்திரை செவ்வாயிலே துர்க்கைக்கு விளக்கேற்றினால் சிந்தையில் உதித்த காரியம் சீக்கிரமே நடந்தேறும்

183

சித்திரை செவ்வாய் கிழமை.
மீனாட்சி சுந்தரேஸ்வரரை மணமுடித்து தன் அண்ணணாண கள்ளழகரின் சீர் வாங்கி முடித்து பேரானந்தத்தில் திளைத்திருந்தாள் அவள் தந்தையான மலையத்வஜ பாண்டியண் தம்பதிகளை காண வந்து அனுமதிக்காக காத்திருந்தான். இது தெரிந்த அன்னை மீனாட்சி மனம் வருந்தினாள் தன்னால் தான் தன் தந்தை இவ்வாறு செய்தார் என்று மனம் வருந்தாள்.

அப்போது அவரே எதிரே அவரே எதிர்பாராமல் சிவ குடும்பமாக விஸ்வரூப தரிசனம் தந்தாள் அன்னை பராசக்தியான மீனாட்சி.

மனக்கண்ணில் மலையத்தவஜனுக்கு துர்க்கையும் ஒரு சேர தெரிந்தார்கள். சிந்தை குளிர்ந்தான் பாண்டியன்.

என்ன வேண்டும் கேளுங்களென இருவரும் கேட்க பாண்டியனோ உலகத்துக்கே தாயான பராசக்தியே மீனாட்சியாக என் மகளாக அவதரித்தாய் துர்க்கையாக காட்சி அளித்தாய்.

இந்த நந்நாளிலே உங்கள் இருவருக்கும் விளக்கேற்றி உங்களை வணங்கும் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கையை கொடும்மா என்று கேட்க அப்படியே ஆகட்டும் என்று இறைவன் திருவாய் மலர்ந்தருளிய நாள் இந்த செவ்வாய் அன்று தான்.

சித்திரை செவ்வாயிலே துர்க்கைக்கு விளக்கேற்றினால் சிந்தையில் உதித்த காரியம் சீக்கிரமே நடந்தேறும் என்று சொல்வார்கள்.

மணமாகாத மற்றும் மணமாண பெண் சகோதரிகளே நாளை துர்க்கைக்கு ஜோடி அகல்விளக்கில் நல்லெண்ணெய் விட்டு ஏற்றி வேண்டிக்கொள்ளுங்கள்.

நீங்கள் நினைத்தெல்லாம் நிச்சயம் நடக்கும்