இழந்த செல்வங்களை பாண்டவர்களுக்கு மீண்டும் கிடைக்க செய்த தலம்

120

திருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோ‌‌ஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்கள் நிறைய பேர். அவர்களில் பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர் என்பது வரலாறு.

ருநாகேஸ்வரம் ராகுவை வழிபட்டு தோ‌‌ஷம் நீங்கி பெரும்பேறு பெற்றவர்களில் சிலர். சூரியன் இங்கு வழிபட்டு பேறு பெற்றான் வினாயகர் வழிபட்டு கணங்களுக்கு பதியானார். கவுதமர் வழிபட்டு அகலிகையை அடைந்தார். நளன் இங்கே முறைப்படி வழிபட்டு இழந்த மனைவியை பெற்றான். பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றதோடு கார்த்திகை மாதத்தில் திருவிழாவினையும் நடத்தி வந்தனர். வசி‌‌ஷ்ட முனிவரும், இந்திரனும், பிரம்மனும், பகீரதனும் இங்கே வழிபட்டுள்ளனர்.

சித்திரசேனன் என்ற மன்னன் திருநாகேஸ்வரம் வந்து வழிபட்டு தனக்கு குழந்தை பாக்கியம் அருள விரதம் இருந்து நல்ல புத்திரனைப் பெற்றான். நற்குணன் என்ற முனிவர், இத்தலத்தை வந்து வழிபட்டு பாம்பு கடித்து உயிர் நீத்த தனது மகனை பிழைக்கச் செய்தார். நாக மன்னர்களான ஆதிசேடன், தக்சுகன், கார்கோடகன் ஆகியோரும் வழிபட்ட வரலாறு இங்கு உள்ளது.