கோ பூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும்

74

பசுவை கோமாதா என்று அழைக்கும் நாம் அதற்கு உணவாக வாழைப்பழம், அகத்திக்கீரை அளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது.

பசுவை கோமாதா என்று அழைக்கும் நாம் அதற்கு உணவாக வாழைப்பழம், அகத்திக்கீரை அளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. காமதேனு பசு மூன்று உலகிற்கும் தாயாக கருதப்படுகிறது.பசுவுக்கு தினமும் பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்கு சமமாகும்.பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும், 48 ஆயிரம் ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், நவக்கிரகங்களும் வீற்றிருந்து ஆட்சி செய்கின்றனர்.நாள் தோறும் பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால் பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும்.

பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவே தான் அவரை கோபால கிருஷ்ணன் எனவும் அழைக்கிறோம்.கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் கன்றும் இருக்க வேண்டும்.கோ பூஜை செய்வதால் பணக் கஷ்டம் நீங்கும். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் ஆகியவற்றின் போது பசு தானம் செய்தால் கூடுதல் புண்ணியம் சேரும்.ஒரு பசு தன்னுடைய முதல் கன்றை பிரசவிக்கும்போது அதனை “தேனு” என்பார்கள். 2வது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை “கோ” என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைதான் “கோ பூஜை”க்கு பயன்படுத்துவார்கள்.

பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. எனவே தான் பசுவின் பின்பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.பசு தானம் வாங்குபவர்கள் லட்சம் தடவை காயத்ரி மந்திரம் சொன்னால் கடன் சுமை குறையும்.