கடன் பிரச்சனை விரைவில் தீரும் இந்த பரிகாரம் செய்தால்

266

கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை செய்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.

கடன் தொல்லை தீர பரிகார முறைகளாக முன்னோர்கள் வீடு கட்டும் பொழுது, நிலை வாசலில் மற்றும் கிணறு தோண்டும் சமயம் மற்றும் வேறு சில சூட்சுமமான இடங்களில் ஓட்டை காலணா, வசதி உள்ளோர் வெள்ளி நாணயம், அரச குலத்தோர் தங்க நாணயம் போன்றவை அவ்விடம் புதைத்து வைப்பது வழக்கம். இவை அந்த இடம்/மனை பல காலங்கள் செல்வ செழிப்புடன் இருக்க உதவும் ஒன்று. தற்காலங்களில் இவை காணப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, அதே வீரிய சக்தியை கொண்ட மற்றும் அனைவரும் எளிதாக செய்ய கூடிய ஒன்று தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1.20 முதல் 2 மணிக்குள், ஆறு ஒரு ருபாய் பழைய நாணயத்தை வலது கையில் எடுத்து கொண்டு வீட்டின் அல்லது அலுவலகத்தின் / தொழில் செய்யும் இடத்தின் வடகிழக்கு மூலை சென்று வடகிழக்கை நோக்கியவாறு அமர்ந்து ஸ்ரீம் என்ற மந்திரத்தை 60 முறை கூறி பின்பு நாணயங்களை அவ்விடம் புதைத்து விடவும். அடுத்து வரும் 33 நாட்களுக்கு மட்டும் கையளவு மஞ்சள் கலந்த நீரை மேற்கண்ட மந்திரத்தை 6 முறை கூறியவாறு தெளித்து வரவும். இது அவ்விடத்தை வறுமை நீக்கி, செல்வம் வளம் பெருக செய்யும் ஒரு பரிகாரமாகும். அந்த நாணயங்கள் நிரந்தரமாக அந்த மனையில் இருக்க வேண்டும்.

குறிப்பு : வடகிழக்கில் மண் இல்லாதோர், அடுக்குமாடிகுடியிருப்பில் வசிப்போர், வாடகை வீடு, அலுவலகம் போன்றவற்றிற்கு மேற்கண்ட முறையை சிறு தொட்டியில் மண் நிரப்பி அதில் புதைத்து வைத்து செய்து வரவும். வேறு இடம் மாற்றம் செய்ய நேரின், அதை புது இடத்தில் குறிப்பிட்டு உள்ள பகுதியில் வைத்து விடலாம்.