குழந்தை மற்றும் திருமண பாக்கியம் அருளும் மாவிளக்கு வழிபாடு

165

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் மாவிளக்கு ஏற்றி வழிபடும்போது கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

கோமதி அம்மன்சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் பக்தர்களின் மாவிளக்கு வழிபாடு மிகவும் பிரதானமான வழிபாடாக இருக்கிறது. குழந்தை மற்றும் திருமண பாக்கியம், நோய் நொடியில்லாத வாழ்வு என பல்வேறு வேண்டுதல்கள் நிறைவேற கோமதி அம்மன் சன்னதியில் கொடிமரத்தின் முன்பு பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர்.

அதுமட்டுமின்றி தலைவலி, கால் வலி, கை வலி, உடல் வலி உள்ளிட்டவற்றால் அவதிப்படக்கூடிய பக்தர்கள், அதிலிருந்து விடுபட மாவிளக்கு ஏற்றுகிறார்கள். அவர்களுக்கு எந்த பகுதியில் வலி ஏற்பட்டு அவதிப்படுகிறார்களோ, அந்த பகுதியில் மாவிளக்கை ஏற்றி வழிபடுகிறார்கள். அப்படி மாவிளக்கு ஏற்றி வழிபடும்போது கோமதி அம்மன் தங்களது வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.