மனநோயை குணமாக்கும் திருக்கொள்ளம்புதூர் வில்வவனேசுவரர்

102

சித்த பிரமை உள்ளவர்கள், மனகுழப்பத்தில் தவிப்பவர்கள் திருக்கொள்ளம்புதூர் வில்வவனேசுவரரை வந்து வழிபட்டால் மனத்தெளிவு பிறக்கும். மனநோய் நீங்கும்.

திருக்கொள்ளம்புதூர் கும்பகோணத்திலிருந்து 20 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வில்வவனேசுவரர் அம்பிகை சௌந்தர்ய நாயகி என்று அழைக்கப்படுகின்றனர்.

இத்தலம் அர்த்தசாமம் எனப்படும் இரவு (மாலை 7.30 முதல் 8.30 மணி வரை) வழிபாட்டிற்கு ஏற்றது. இவ்விடம் வில்வவனம் ஆகும். திருஞானசம்பந்தர் இத்தல இறைவனை வழிபட வந்தபோது காவிரியின் கிளைநதியான முள்ளியாற்றில் வெள்ளம் பெருகியது. அப்போது சம்பந்தர் இறைவனை நினைத்து பதிகம் பாட ஓடம் தானாகவே ஓடி மறுகரையை அடைந்தது என்பது வரலாறு.

விநாயகர், கங்கை, காவிரி, ஆதிசேசன், இடைக்காடர், பிருகு முனிவர், காசிப முனிவர், கண்வ முனிவர், அகத்திய முனிவர், வசிட்ட முனிவர், வாமதேவர், வரகுணபாண்டியன், கோசெங்கட்சோழன் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டு மேன்மை அடைந்தவர் ஆவர். சித்த பிரமை உள்ளவர்கள், மனகுழப்பத்தில் தவிப்பவர்கள் இங்கு வந்து வழிபட்டால் மனத்தெளிவு பிறக்கும். மனநோய் நீங்கும். தேவார பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்த 113-வது தலமாகும்.

நாமும் பஞ்சஆரண்ய தலங்களில் வழிபாடு மேற்கொண்டு நன்னிலை அடைவோம்.