மனதில் நினைத்ததெல்லாம் நிறைவேற வேண்டுமா?

289

நம்முடைய மனதில் எதை நினைத்தாலும் அது நிறைவேறிவிட்டால் அது நமக்கு கிடைத்த வரம் என்று நினைக்கிறீர்களா? நல்லது நினைத்து நிறைவேறினால் அதில் எந்த தவறும் இல்லை. அதுவே கெட்டதை நினைத்து நிறைவேறிவிட்டால்! யோசிக்கவே பயமாக உள்ளது அல்லவா? இனி கெட்டதை சிந்திப்பதை நிறுத்தி விட்டு, நல்லதையே சிந்திப்போம். என்று உறுதி மொழியை முதலில் எடுத்துக் கொள்வோம். அடுத்ததாக நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? ‘ஆண்டவா! என் மனதில் நான் நினைத்திருக்கும் இந்த காரியத்தை வெற்றியோடு நடத்திக் கொடுக்க உன்னை மனதார வேண்டிக் கொள்கின்றேன்’ என்று இறைவனிடம் நம் வேண்டுதலை சொல்லிவிடுவோம். எப்படிப்பட்ட ரகசியமான வேண்டுதலாக இருந்தாலும், அதை முதலில் இறைவனிடத்தில் சொல்லிவிடுவோம். இது நம்மில் பலருக்கு இருக்கும் பழக்கம் தான். ஆனால் அந்த வேண்டுதல் கூடியவிரைவில் நடப்பதற்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்? என்பதற்கான தீர்வினை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இது ஒரு தீர்வு அல்ல. சூட்சம ரகசியம், என்று கூட சொல்லலாம். நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட பரிகாரம். பொதுவாகவே கடவுள்களில், மனித அவதாரம் எடுத்து இப்பூமியில் பிறந்தவர்களை வேண்டிக் கொண்டால், நாம் நினைக்கும் காரியம் உடனடியாக நிறைவேறிவிடும் என்பது பலரின் கூற்று. இது உண்மையும் தான். அப்படிப்பட்ட ஒரு இறைவனை நினைத்து தான் இந்த பரிகாரமும் சொல்லப்பட்டுள்ளது.

நீங்கள் மனதில் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றாலும், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இழந்ததை திரும்பவும் மீட்டெடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை அன்று அரச மரத்திலிருந்து 11 இலைகளை எடுத்து, அதில் நான்கு முறை சிகப்பு சந்தனத்தால் “ராம் ராம்” என்ற பெயரை எழுத வேண்டும். முதல் வரியில் இரண்டு முறை. இரண்டாம் வரியில் இரண்டு முறை. மொத்தம் நான்கு முறை. 11 இலைகளிலும் எழுதி வைத்துவிட்டு, ஏதாவது ஒரு அனுமன் கோவிலுக்குச் சென்று, ‘நீங்கள் நினைத்த காரியம் நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு’ நம்பிக்கையுடன், நீங்கள் எழுதிய இலைகளை அந்த கோவிலில் வைத்துவிட்டு வரவேண்டும்.

இது ஒரு சிறிய பரிகாரமாகத் தான் தெரியும். ஆனால் நீங்கள் ராமரை நினைத்து மனதார அந்த இலையில் எழுதப்படும் எழுத்தானது ஆஞ்சநேயரின் மனதை குளிர வைத்து, வேண்டிய வரத்தை உடனடியாக பெற்றுவிடலாம் என்று கூறுகிறது சாஸ்திரம். சிகப்பு சந்தனம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து இத்தனை வாரங்கள் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களது எண்ணம் நிறைவேறும் வரை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம்.