மனவேதனையும், துன்பங்களும் தீர உங்களது வேண்டுதல்களை இவருடைய காதில் சொல்லுங்க…

97

எப்படிப்பட்ட மனவேதனையும், தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய காதில், இப்படி சொல்லி வந்தால் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும். கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். உங்களுக்கான தீர்வு சொல்லும் சக்தி அந்த ஆண்டவன் இடத்தில் மட்டும் தான் உள்ளது. உங்களுடைய கஷ்டங்களை தொடர்ந்து இவருடைய காதுல போய் இப்படி சொல்லுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் எம்பெருமானின் காதுகளுக்கு போய் சேர்ந்துவிடும்.

நந்தியம்பெருமானிடம் 108 நாட்கள் தொடர்ந்து உங்களது குறைகள் தீர இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். தினந்தோறும் சிவபெருமான் ஆலயத்திற்கு அல்லது சிவபெருமானின் சன்னதி இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். நந்தி பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்ற வேண்டும். அடுத்தபடியாக நந்தி பகவானுக்கு வலது பக்கம் வந்து நின்று, நந்தி பகவானின் வலது காதில் உங்களுடைய கோரிக்கைகளை சொல்ல வேண்டும். நந்தி பகவானுக்கு அருகில் சென்று மனதார உங்களது கோரிக்கைகளை உச்சரித்தாலே அவரது காதில் கேட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும் நந்தியை நாம் தொடக்கூடாது.

அடுத்தபடியாக, பூக்களைக் கொண்டோ அல்லது வில்வ இலைகளை வைத்தோ, சிவபெருமானுக்கும் நந்திக்கும் அர்ச்சனை செய்து உங்களது வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை, முடிந்த பணிகளை, சிவன் கோவில்களுக்கு செய்து வாருங்கள்.

இப்படியாக 108 நாட்கள் தொடர்ந்து உங்களது கஷ்டங்களை, உங்களது வேதனைகளை நந்தி பகவானிடம் சொல்லிவிட்டு பிரச்சனைகளை அவரது பாதங்களில் போட்டுவிட்டு, உங்களது விடா முயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு, வாழ்க்கையில் பயணம் செய்துகொண்டே இருங்கள். உங்கள் கஷ்டத்திற்க்கான தீர்வு 108வது நாளில் நிச்சயம் உங்கள் கைகளை வந்து சேரும்.