நீங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு முன் ஜென்ம சாபம் தான் காரணமா?

402

வாழ்க்கையில் நாம் முன்னேறாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு தடை வந்து கொண்டே இருக்கின்றது என்றால், அதற்கு சாபம் கூட ஒரு காரணமாக இருக்கலாம். சாபங்களில் பலவகை உண்டு. அடுத்தவர்களுக்கு நாம் செய்யும் தீங்கினை வைத்துதான் நமக்கான சாப கணக்கு இருக்கும். முன் ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களின் மூலம் கிடைத்த சாபம், இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களின் மூலம் கிடைத்த சாபம், இவை அனைத்தும் நம்மிடம் வந்து தங்கிவிடும். இதோடு சேர்த்து அடுத்தவர்கள் வயிற்றெரிச்சலோடு நம்மை சபித்து இருந்தால், அதில் இருந்தும் நம்மால் மீள முடியாது. நம்மீது பொறாமைப்பட்டு சில பேர் வயிற்றெரிச்சலோடு, நாம் நன்றாக வாழ கூடாது என்று தவறான வார்த்தைகளை கூறி விட்டால்கூட அது சில சமயம் நம் வாழ்க்கையை பாதித்து விடும். இப்படிப்பட்ட வயிற்றெரிச்சலும், சாபமும் நம்மை நன்றாக வாழவே விடாது. இதனை சரி செய்ய என்ன செய்யலாம்? சாபம் நீங்க நம் முன்னோர்கள் கூறிய ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

நமக்கு எப்படிப்பட்ட சாபம் இருந்தாலும் அதன் அறிகுறிகளை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். நம் ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டினாலே சாபம் இருக்கின்றதா, இல்லையா என்று தெரிந்துவிடும். இரண்டாவதாக வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்துகொண்டே இருக்கும். சரியாக சாப்பிட முடியாது. வயிற்று வலி இருக்கும். எந்த வேலையையும் நம்மால் முழுமையாக செய்து முடிக்க முடியாது. அதாவது ஒருவருக்கு தீராத சாபம் இருக்கின்றது என்றால் அந்த சாபம் ஒரு மனிதனுக்கு முதலில் வயிற்றுப்பகுதியை தான் தாக்கும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அடுத்தவருடைய வயிற்றெரிச்சலும் அவர்கள் இடப்பட்ட சாபமும் நம்மிடம் வந்து தங்கும் இடம் வயிறு தான். – Advertisement – முதலில் ஒரு பெரிய அளவிலான வெள்ளை துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். குங்குலியம் நாட்டு மருந்து கடைகளில் பெரிய துண்டாக கிடைக்கும். அதை உடைத்து சிறு துண்டுகளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

குங்கிலியம், சிவப்பு குன்றிமணி ஒரு கைப்பிடி அளவு, இவை இரண்டையும் வெள்ளைத் துணியில் வைத்து சுருட்டி கட்டிக் கொள்ளவேண்டும். அதாவது நீளமாக இருக்கும் இந்தத் துணியை இடுப்பில் கட்டிக் கொள்ளும்படி தயார் செய்து கொள்ள வேண்டும். குங்குலியமும், குன்றிமணியும் நம்முடைய தொப்புலுக்கு நேராக இருக்கும்படி வைத்துவிட்டு, வயிற்றை சுற்றி அந்த துணியால் கட்டிக் கொள்ளலாம். நம்முடைய வயிற்றில் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டானது இரண்டு மணி நேரம் வரை அப்படியே இருக்கலாம். இந்த பரிகாரத்தை பெண்களும் செய்துகொள்ளலாம். ஆண்களும் செய்து கொள்ளலாம்.

அடுத்தவர்களின் சாபமாக இருந்தாலும், வயிற்றெரிச்சலாக இருந்தாலும் அதை நம் உடம்பிலிருந்து நீக்கக்கூடிய சக்தியானது இந்த இரண்டு பொருட்களுக்கு உள்ளது. இதை ஒரு முறை செய்தால் போதும். பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு இந்த பொருட்கள் எல்லாம் ஓடும் ஆற்றில் போட்டு விடலாம். உங்களின் வீட்டு அருகில் ஆறு இல்லாதவர்கள் ஆள் நடமாட்டமில்லாத, கால் படாத ஒரு இடத்தில் கொண்டுபோய் இந்த பொருட்களை போட்டு விடுங்கள்.

இந்த பரிகாரத்தை காலை வேளையில் செய்தால், மாலையில் உங்கள் வீட்டில் தயிர் சாதம் செய்து, ஒரு பத்து பேருக்கு அன்னதானமாக கொடுத்துவிடலாம். தயிர் சாதத்தை தாளிக்கக் கூடாது. வெறும் உப்பு போட்ட தயிர் சாதம் கொடுப்பது சிறந்தது. மாலையில் இந்த பரிகாரத்தை செய்தால், அடுத்த நாள் காலையில் அன்னதானம் செய்து விடுங்கள். உங்களைப் பிடித்திருந்த கெட்டது, உங்களை விட்டு நீங்கி விட்டது என்று உறுதி செய்து கொள்ளலாம். அந்த அளவிற்கு இந்த பரிகாரம் மிகச் சிறப்பான ஒரு பரிகாரமாக கருதப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். இதையும் படிக்கலாமே நிலம் வாங்கி வீடு கட்டும் எண்ணம் நிறைவேற நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட ஒரு சின்ன பரிகாரம்! இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.