கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியரை ஒன்று சேர்க்கும் கோவில்

140

திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.

கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியரை ஒன்று சேர்க்கும் கோவில்
திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் கோவில்
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மருநோக்கும் பூங்குழலியம்மை உடனாய திருநோக்கிய அழகியநாதர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைவனை, தன்னுடைய குறைகளை போக்க வேண்டும் என்று இறைவி, துளசி இலைகளால் வழிபட்டதாக சொல்லப்படுகிறது.

எனவே திங்கட்கிழமை தோறும் இத்தல ஈசனுக்கு, துளசி இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கிறார்கள். திருமணத் தடை உள்ளவர்கள், கருத்துவேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதியர் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், நன்மைகள் நடைபெறும்.