புத்திர தோஷம் நீங்க உடனடி பலன் தரும் பரிகாரம்

350

புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை, குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைவு மற்றும் குழந்தைகளால் மன வருத்தம் ஏற்படுவது போன்றவை இந்த தோஷத்தால் உண்டாகும். இதற்கான விரைவில் பலன் தரும் பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.

புத்திர பாக்கியம் கிடைப்பதில் தடை, குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைவு மற்றும் குழந்தைகளால் மன வருத்தம் ஏற்படுவது போன்றவை இந்த தோஷத்தால் உண்டாகும்.

பரிகாரம்

* முறையான குலதெய்வ வழிபாடு, பித்ருக்கள் பூஜை நல்ல பலன் தரும்.

* சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரை, கணபதி ஹோமம் செய்து வழிபடலாம்.

* பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபம் அரச மரம். அந்த மரத்தை வணங்குவதால் பாவமும், நோய்களும் நீங்கும்.

* குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு அரச மரத்தை வலம் வந்தால், அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவின் சக்தியால் கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்படும். அதேபோல ஆண்களும் வலம் வந்தால், அவர்களுக்கு சுக்ல விருத்தி அதிகமாகும்.