சர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம்

352

பாம்பை கொல்வதால் ஒருவருக்கு நிச்சயமாக நாக, சர்ப்ப தோஷங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தோஷங்கள் அனைத்தும் நீங்க மேற்கண்ட மந்திரத்தை துதிப்பது சாலச் சிறந்தது.

 

நர்ம தாயை நம ப்ராத
நர்ம தாயை நமோ நிசி
நமோஸ்து நர்மதே துப்யம்
த்ராஹிமாம் விஷ ஸர்பத

பாம்பின் வடிவில் இருக்கும் நாக தேவதைகளை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளையில் 27 முறை அல்லது 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பாம்பு புற்றுள்ள கோவில்களுக்குச் சென்று, புற்றிற்கு முன் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து வணங்குவதால், பாம்புகளை கொன்றதால் ஏற்பட்ட தோஷங்கள், ஜாதகத்தில் ராகு – கேது கிரகங்களின் பாதகமான நிலையால் ஏற்படும் திருமணத்தடை, கல்வித்தடை, வேலைவாய்ப்பின்மை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் நீங்கி நன்மையான பலன்களை பெறலாம்.