செவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்

272

 

செவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. அதற்கு திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவில்ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம்.

செவ்வாய் கிரகத்திற்கு தனி ஆலயம் இல்லை. செவ்வாய், கிரகங்களுக்கு தளபதியாக இருப்பதால் போர் செய்யும் கிரகமென்று எடுத்துக் கொள்ளலாம். பூமி புதல்வனாகையால் வீடு, நிலம் போன்ற சொத்துக்களுக்கும் உகந்தவனாகிறான்.

செவ்வாய் சில சமயம் சிலருக்குத் திருமணத் தடையை உண்டாக்குகிறான். செவ்வாய் ஜாதகத்தில் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. இதை விலக்கிக் கொள்ள பலர் சாந்திப் பரிகார முறைகளைக் கையாண்டு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அதற்கு நாம் திருநறையூர் எனப்படும் நாச்சியார் கோவிலுக்கு செல்ல வேண்டும்.

48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும்.