சுக்கிர தோஷம் நீக்கும் கஞ்சனூர்

161

கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். இங்கு சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு.

கஞ்சனூர்‘காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா?’ என்பது ஒரு பாடல். ‘ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்’ என்பது ஒரு பழமொழி. ‘ஒன்னாம் தேதி கொண்டாட்டம், முப்பத்தியொன்னாம் தேதி திண்டாட்டம்’ என்பது பணத்தின் அருமை பற்றி கவிஞர் ஒருவர் பாடிய பாடல். இப்படி பணத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பணத்தை நாம் குவித்து வைத்துப் பார்க்க வேண்டுமானால் லட்சுமி கடாட்சம் நமக்கு வேண்டும். சுக்ர திசை நடப்பவர்களுக்கு, பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். ஆனால் கடக ராசிக்கு சுக்ரன் பாவி, தனுசு ராசி, மீனராசிக்கு ராசிநாதன், குருவிற்கு சுக்ரன் பகை கிரகம். பகைவனாக இருந்தாலும் அண்டி வந்தவர்களுக்கு அள்ளி வழங்குகின்ற ஆற்றல் சுக்ர பகவானுக்கு உண்டு.

அதனால்தான் ‘வெள்ளி சுக்ரன் வேந்தா உன்போல் அள்ளிக் கொடுப்பதற்கு யாரும் உண்டோ’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பிருகு மாமுனிவரின் மகன் ஆங்கீரஸ முனிவரிடம் பாடம் பயின்றவர் சுக்ரன். நாம் சுக போகங்களை அனுபவிக்கவும், செல்வச் செழிப்பில் மிதக்கவும் வழி வகுத்துக் கொடுப்பவர்.

கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு. வெள்ளை ஆடை, மொச்சை, வெண்தாமரை இவருக்குப் பிரியமானது. இறைவன் – இறைவியின் திருமணக் கோலத்தை காண பிரம்ம தேவர் விரும்பினார். அதற்காக இந்த ஸ்தலத்தில் தவமிருந்தார். பிரம்மா விருப்பப்படி திருமண கோலத்தை இறைவன் காட்டி அருளினார். எனவே நாமும் திருமணக்கோலம் காணவும், செல்வ வளம் பெருகவும் யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபாடு செய்ய வேண்டும்.