ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை வழிபட்டால் இந்த பிரச்சனைகள் தீரும்

73

ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.

ஒருவருடைய ஜாதகத்தில் யோகம் என்ற அடிப்படையில் பார்க்கும் போது பரிவர்த்தனை யோகம், உயர்ந்த செல்வம், பட்டம், பதவி மற்றும் அனைத்து வகையான செல்வமும் கிடைக்கும் என்று கூறுகின்றனர். அதே போல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரரோ ஞானத்தையே திருமேனியாகக் கொண்டவர் உலக உயிர்களுக்கு ஞானம் அருள்பவர். இங்கே அம்பாளின் ஆற்றலை பெற்று சக்தி மயமாக சுவாமியும், சுவாமி ஆற்றலைப் பெற்று சக்தி சிவமயமாகவும் அமர்ந்து இருப்பதால் பரிவர்த்தனை யோகத்தில் நவகிரக நாயகி அருள்பாலிக்கிறாள்.

சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தை வழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்த கூடியவர். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்கியம் இதற்கெல்லாம் தந்தை வழி உறவுகளான ஒற்றுமை பாதிக்கப்பட்டு இருந்தாலும், பூர்வீக சொத்தில் வில்லங்கம், உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு. தலை, கண்கள், வயிற்று வலி, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள், சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசு வழி அனுமதி கிடைப்பதில் தாமதம், சிலருக்கு திருமண தாமதம் உள்ளவர்கள் சூரிய தோஷத்தில் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்புகள் வரும்.

இந்த வகை பாதிப்பு உள்ளவர்கள் ஞாயிற்றுக்கிழமை முத்தாரம்மனை தரிசித்து வழிபட்டால் இந்த வகை தடைகள் அகலும். கோதுமையால் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை அம்மனுக்கு படைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு தானம் செய்யுங்கள். எல்லா பிரச்சினையும் அகன்று ஓடி விடும்.