தீர்த்தங்களும்… தீரும் பிரச்சனைகளும்…

315

கும்பகோணம் மகாமக குளத்தில் 20 தீர்த்தங்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த தீர்த்தங்களையும், அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடுவது மிகவும் புண்ணியம் சேர்க்கும். ஏனெனில் மாசி மகம் அன்று, இங்கு புண்ணிய நதிகளும் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக புராணங்கள் சொல்கின்றன. கும்பகோணம் மகாமக குளத்தில் 20 தீர்த்தங்கள் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த தீர்த்தங்களையும், அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

* வாயு தீர்த்தம் – நோய்கள் அகலும்.

* கங்கை தீர்த்தம் – கயிலைப் பதவி அளிக்கும்.

* பிரம்ம தீர்த்தம் – இறந்த முன்னோர்களை சாந்தப்படுத்தும்.

* யமுனை தீர்த்தம் – பொருள் சேர்க்கை உண்டாகும்.

* குபேர தீர்த்தம் – சகல செல்வங்களும் உண்டாகும்.

* கோதாவரி தீர்த்தம் – எண்ணியது நடக்கும்.

* ஈசான்ய தீர்த்தம் – சிவனடி சேர்க்கும்.

* நர்மதை தீர்த்தம் – உடல் வலிமை உண்டாகும்.

* இந்திர தீர்த்தம் – மோட்சம் அளிக்கும்.

* சரஸ்வதி தீர்த்தம் – ஞானம் உண்டாகும்.

* அக்னி தீர்த்தம் – பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

* காவிரி தீர்த்தம் – புத்தியை மேம்படுத்தும்.

* எம தீர்த்தம் – மரண பயம் நீங்கும்.

* குமரி தீர்த்தம் – வளர்ப்புப் பிராணிகளுக்கு பலன்களைக் கொடுக்கும்.

* நிருதி தீர்த்தம் – பேய், பூதம் போன்ற தேவையற்ற பயம் நீங்கும்.

* பயோஷினி தீர்த்தம் – கோலாகலம் அளிக்கும்.(பாலாறு)

* அறுபத்தாறு – துன்பம் நீங்கி இன்பம் கூடும்.கோடி தீர்த்தம்

* வருண தீர்த்தம் – ஆயுள் விருத்தி உண்டாகும்.

* சரயு தீர்த்தம் – மனக்கவலை தீர்க்கும்.

* தேவ தீர்த்தம் – சகல பாவங்களையும் போக்கி, தேவேந்திர பதவி தரும்.