உயர் பதவி, குழந்தை வரம் அருளும் கோவில்

50

பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும்.

இவ்விடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு இறைவன் திரிவிக்ரமன் எனப்படும் உலகளந்தப் பெருமாளாக உள்ளார். திருமால் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பின் திரிவிக்ரமனான காட்சியளித்த உலளந்த பெருமாளாக திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார்.

பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோருக்கு திருமால் காட்சியளித்து அவர்களை பாசுரம் பாட வைத்த தலம். இங்கு திருமால் இடக்கையில் சக்கரத்தினையும், வலக்கையில் சங்கினையும் மாற்றிக் கொண்டு பக்தர்களுக்கு ஞானத்தை வழங்குகிறார். இங்கு திருமால் திரிவிக்ரமர், உலகளந்தப் பெருமாள் என்ற பெயர்களிலும், தாயார் பூங்கோவல் நாச்சியார் என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் இவ்விடம் 43-வது திவ்ய தேசமாகும்.

பதவி இழந்தோர், பதவி உயர்வு விரும்புவோர், நல்ல பதவி வேண்டுவோர், திருமண வரம், குழந்தை வரம் இத்தல இறைவனை வேண்ட நினைத்தது கிடைக்கும். இத்தலம் நடுநாட்டு திருப்பதி என சிறப்பாக அழைக்கப்படுகிறது.

நாமும் பஞ்ச கிருஷ்ண தலங்கள் சென்று வழிபட்டு திருமால் அருளோடு வளமான வாழ்வு வாழ்வோம்.