அதிர்ஷ்டம் எப்பொழுது உங்களை தேடி வரும் ?

46
அதிர்ஷ்டம் எப்பொழுது  உங்களை தேடி வரும் ?
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,  வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை என்ற கண்ணதாசன் வரிகள் வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை எளிமையாக விளக்குவதை நம்மால் மறுக்க இயலாது .மனிதனாய் பிறந்தவனுக்கு திறமைக்கு ஏற்ப அதிர்ஷ்டமும் இருந்தால் தான் வெற்றி எனும் இலக்கை அடைய முடியும் .  உலகில் பிறந்த அனைவரும் தங்கள் மனதுக்குள் சாதிக்க வேண்டும் , பொருள் இட்ட வேண்டும் , புகழ் பெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது இயற்கையானதே , ஆனால் அதிர்ஷ்டம் அனைவருக்கும் அமைவது இல்லை . கடுமையாக உழைப்பவராக இருப்போம் அனால் அதற்கு ஈடான பலன் கிடைக்காமல் மனம் வருத்தத்தில் இருப்போம் . ஜோதிடத்தில் ஒருவரின் அதிர்ஷ்டத்தை குறிக்கும் பாவங்கள் 1 , 5 , 9 அம் பாவங்கள் . அதிலும் குறிப்பாக 5 ஆம் பாவம் அதிர்ஷ்டத்தை மட்டும் குறிக்கும் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் . ஜோதிடப்படி ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் , ஒரு மனிதன் எப்பொழுது சாதிப்பான் என்பதை இந்த பதிவில் பார்ப்போம் . உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா ? உங்கள் இலக்குகளை உங்களால் எப்பொழுது எட்ட முடியும் என்பதை காண வேண்டுமா ? இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிட கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு வாட்ஸப்பில் உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி குறைந்த கட்டணத்தில் தெளிவான விவரங்கள் பெறுங்கள் .
அதிர்ஷ்டம் எப்பொழுது தேடி வரும் :
1. 5 ஆம் பாவம் எனப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானம் , சுபர் வீடாக இருந்து சுப ஒளி தொடர்பு பெற்று , 5 ஆம் அதிபதியும் வலுவாக இருக்கும் போது அவரின் அதிர்ஷ்டம் அவருக்கு வாழ்நாள் முழுவதும் கை கொடுக்கும் . குறிப்பாக 5 ஆம் அதிபதியின் தசா நடக்கும் போது அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் . இந்த 5 ஆம் பாவகம் நமது வேத ஜோதிட படி நாம் சென்ற பிறவியில் செய்த பாவ , புண்ணியங்களுக்கு ஏற்ப இந்த பிறவியில் பலன் தருவதாக சொல்லப்படுகிறது .
2. ஜாதகரின் பருவ வயது எனப்படும் 15 – 20 வயதில் அவருக்கு அவரின் லக்கின அணிகளுக்கு ஏற்ப யோக தசைகள் அடுத்து அடுத்து வரும்  போது அவர் அதிர்ஷ்டத்தின் உதவியால் நல்ல நிலையை அடைவார் .  உதாரணமாக ஒருவர் துலாம் லக்கினத்தில் பிறந்தவராக இருந்தால் அவருக்கு யோக தசைகளான சனி , புதன் மற்றும் சுக்கிரன் தசைகள் பருவத்தில் வருமேயானால் அவர் தனது வாழ்நாளில் படி படியாக முன்னேற்றம் அடைவராக இருப்பார் . இந்த யோக கிரகங்கள் எவ்வளவு மோசமான நிலைமையில் இருந்தாலும் அவை ஜாதகரை காப்பாற்றவே முயற்சி செய்யும் .
3. ஜாதகருக்கு லக்கினாதிபதி அல்லது ராசியாதிபதி சுப வலுவுடன் இருந்து அந்த  தசா சுப தொடர்புடன் நடக்கும் போது அவருக்கு நினைக்கும் விஷயங்கள் நினைப்பதற்கு முன்னரே அவருக்கு கிடைக்கும் . நமது ஜாதகத்தில் என்ன யோகங்கள் இருந்தாலும் நமது லக்கினாதிபதி வலுவாக இருந்தால் தான் நமக்கு அந்த யோகங்கள் வேலை செய்யும் . லக்கினமே ஒரு ஜாதகத்தின் முதுகெலும்பு .
4. ஜாதகரின் அவயோக கிரகங்கள் எனப்படும் 6 , 8 மற்றும் 12 ஆம் வீட்டின் அதிபதிகள் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ஏதேனும் இந்த ஒரு வீட்டில் ஒன்றாக இருந்து , அல்லது பரிவர்த்தனை அடைந்து அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டும் சுப ஒளியுடன் இருந்து ஜாதகருக்கு தசை வரும் போது அவை விபரீத ராஜா யோகம் எனும் திடீர் அதிர்ஷ்த்தை ஜாதகருக்கு அள்ளி தரும் வல்லமை கொண்டவை .
எல்லாம் வல்ல இறைவன் , உங்களுக்கு குறைவில்லா செல்வங்களை அள்ளி தருவான் என்று சொல்லி விடைபெறுகிறேன் .