அரசு அதிகாரம் உடைய பதவிகளை தரும் சிவராஜ யோகம்!

60

அரசு அதிகாரம் உடைய பதவிகளை தரும் சிவராஜ யோகம்!

ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லையடி என்று ஒரு பிரபல இளையராஜா பாடல் ஒன்று உள்ளது. ஒருவர் அதிகாரம் மிக்கவராக திகழ வேண்டும் என்றால், நமது மூல ஒளி கிரகமான சூரியன் வலு பெற வேண்டும். பொதுவாக சிம்ம ராசி, சிம்ம லக்கினம் மற்றும் சூரியன் லக்கினத்துடன் தொடர்பு கொண்டவர்கள் மற்றவர்கள் மேல் அதிகாரம் செலுத்த விரும்புவர்களாகவும் , அதிகாரம் மிக்கவர்களாவும் திகழ்வார்கள்.

சூரியன் எப்பொழுது அதிக சுப ஒளி தொடர்பு எனப்படும் குருவுடன் தொடர்பு கொள்கிறதோ, அவருக்கு அவரின்  லக்கினம் மற்றும் 10 வீட்டின் நிலையை பொருத்து அரசு அதிகாரி, அரசு உயர் அதிகாரி, அரசியல்வாதி மற்றும் அமைச்சர் போன்ற அதிகாரம் மிக்க நிலைகளில் இருப்பார்.  நமது வேத ஜோதிடத்தில் சூரியனுக்கு ஏழாம் இடத்தில் சம சப்தமாகி குரு அமர்ந்து சூரியனை பார்க்கும் போது மிக உயரிய அமைப்பாக சிவராஜா யோகம் என்று கூறப்படுகிறது . அதாவது அதிகாரத்தை கொடுக்க கூடிய சூரியனை குரு ஏழாம் பார்வையாக பார்த்து புனிதப்படுத்தி, குருவும் சூரியனின் ஒளியை வாங்கி ஒரு பொலிவுடன் இருக்கும்  ஓர் உன்னத நிலை ஆகும்.

எனவே நமது ஜோதிடத்தை கண்டு அறிந்த ஞானிகள் இந்த யோகம் சிவனுக்கு இணையான அதிகாரம் கொடுக்கும் ஓர் ராஜா யோகம் என்று பெயர் வைத்தார்கள். எல்லா யோகங்களுக்கும் விதி மற்றும் விதி விலக்குகள் உள்ளது. அதை போல இந்த சிவராஜ யோகம் எப்பொழுது வேலை செய்யும்? என்ன பலன் தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா? என்பதை அறிந்து கொள்ள, உங்கள் ஜாதக விவரங்களை நமது ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரிக்கு +91 9677824799 என்ற எண்ணுக்கு வாட்சப் மூலம் அனுப்பி குறைந்த கட்டணத்தில் நிறைவான தெளிவான பலன்களை பெறுங்கள்.

சிவராஜ யோகம் என்ன செய்யும்? எப்பொழுது செயல்படும்?

  1. எந்த ஒரு யோகமும் முழுமையாக செயல்பட வேண்டும் என்றால் பங்கபடாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த யோகம் இருக்கும் ஜாதகருக்கு சூரியன் மற்றும் குரு பாவ கிரகங்களான சனி, செவ்வாய், ராகு போன்றவற்றின் தொடர்பு, சேர்க்கை மற்றும் சனி, செவ்வாய் பார்வை இருப்பது பலன்களை குறைக்கும். மாறாக, சூரியனுடன் சுக்கிரன், புதன் சேர்க்கை இருப்பது நல்ல பலன்களை கூட்டி தரும்.
  2. ஒரு யோகம் வேலை செய்ய வேண்டும் என்றால், அந்த யோகம் சம்பந்தப்பட்ட குரு மற்றும் சூரியனின் தசா அவருக்கு நடக்க வேண்டும். ஒரு சிலர் இந்த யோகம் எனக்கு இருக்கிறது ஆனால் ஏன் வேலை செய்யவில்லை என்று குறை சொல்லுவார்கள். அதற்கு தான் தசா வர வேண்டும், தசாவின் போது தான் அந்த கிரகங்களின் காரகத்துவங்கள்  வழியாக நமக்கு நன்மைகள் நடக்கும்.
  3. ஒரு கொடுத்து வைத்த ஜாதகருக்கு இந்த யோகம் பங்க படாமல், சரியான பருவமான 25 முதல் 40 வயதுக்குள் வரும். இதில் இன்னமொரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஜாதகர், சூரியன் அணி லக்கினங்களான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் போன்ற லக்கினம் கொண்டவர்களுக்கு இந்த யோகா தசைகள் மிக பெரிய நன்மைகளை வாரி வழங்கும்.
  4. இந்த யோகத்தை கொண்ட ஒருவர் கலெக்டர் எனும் உயர் அதிகாரத்திலும், மற்றோருவர் அவருக்கு பியூன் எனும் குறைந்த அரசு அதிகாரத்திலும் இருப்பதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நீங்கள் அவர் ஜாதகத்தை அலசி ஆராய்ந்தால், அவர்களின் லக்கினம் மற்றும் லக்கினாதிபதியின் சுப தன்மையின் வேறுபாடுகளே முக்கிய காரணமாய் அமையும். எந்த யோகமும் முழுமையாக பலன் தர லக்கினம் எனும் மையம் சரியாக இருக்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் குறைவில்லை வளங்களை உங்களுக்கு அருள்வான் என்று கூறி விடை பெறுகிறேன்.