அரசு வேலை யாருக்கு கிடைக்கும்? யாரால் சாதிக்க முடியும்?

230

அரசு வேலை யாருக்கு கிடைக்கும்? யாரால் சாதிக்க முடியும்?

கால் காசாக இருந்தாலும் அது கவர்மெண்ட் கொடுக்கும் காசாக இருக்கனும் என்று சொல்லி கேள்விப்பட்டிருப்போம். பொதுவாக பெண் பார்க்கும் வீட்டுக்கு போனதுக்கு அப்பறோம் , மாப்பிள்ளை என்னங்க பண்ணுறாரு கேள்விக்கு” அரசு வேலையில இருக்காருனு பதில் வந்தா கேள்வி கேட்டவரின் முகம் மலர்வதை பார்க்க முடியும். இன்று கொரோனாவின் தாக்கத்தால் பலரது வேலை மற்றும் தொழில் முடங்கியிருந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் மாதம் மாதம் அவர்களது வங்கிக் கணக்கில் சம்பளம் விழுந்தது. இதுதான் அரசு வேலைக்கான கொடுப்பினை. இதுவே டீச்சர் வேலையா இருந்தால் சொல்லவா வேணும்….

பொதுவாக தனது மகன், சகோதரன், தனது மனைவி அரசாங்க ஊழியராக வேண்டும் என பலர் கனவில் இருப்போம். ஒருவர் அரசு ஊழியராக என்ன கிரக நிலைகள் இருக்க வேண்டும்? அரசு அதிகாரத்தை தரும் ஜாதக அமைப்புகள் என்ன என்பதை பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம். நமது மனித சமுதாயத்தின் அதிகார மையமாக அரசும், அரசாங்கமும் உள்ளது. அதை போல நமது சூரிய குடும்பத்தின் ஆதார மையமாக சூரியன் உள்ளது.

இந்த சூரியன் தான் ஒருவர் அதிகாரம் மிக்கவராக இருப்பதுக்கு காரணகர்த்தாவாக விளங்குகிறார். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் மற்றும் சூரியனின் சொந்த வீடான சிம்மம் சுப ஒளி தொடர்பு பெரும் பொழுது அவர் அதிகாரம் நோக்கி வழி நடத்தப்படுகிறார். அரசு வேலையில் இரு வகைகள் உள்ளது. ஒன்று நேரடி அதிகாரம் செலுத்தும் வேலைகள், உதாரணமாக மாவட்ட ஆட்சியர், தாசில்தார், போலீஸ் கமிஷனர் போன்ற வேலைகள் நேரடி அதிகாரம் தொடர்ப்பு கொண்டவை. மற்றொன்று அரசு வங்கி, அரசு தபால், ஆவின் பால் மற்றும் மின் கட்டுமானம் துறை போன்ற வேலைகள் அரசு சேவை வேலைகள்.

சூரியன் அதிக சுப ஒளி தொடர்புடன் இருந்தால் அதிகார மையத்தின் நெருக்கமான பதவியில் இருப்பார், சூரியன் சுப ஒளித்தொடர்பு குறைய குறைய படிப்படியாக அதிகாரம் செலுத்தும் பதவியில் இருந்து கான்ட்ராக்ட் வேலை செய்யும் நபர் வரை அவரின் வேலை குறையும். உதாரணமாக ஒரு ஜாதக அமைப்பை விளக்குவோம், ஒருவரின் லக்கினம் சிம்மம் ஆகி, அவரின் லக்கனத்தின் அதிபதி மற்றும் அரசு வேலையின் காரக கிரகமான சூரியன் கும்பத்தில் இருந்து, அதற்கு நேர் எதிர் வீட்டில் பௌர்ணமி சந்திரன் சிம்மத்தில் இருந்து சூரியனை தொடர்ப்பு கொள்ளும் போது, சூரியன் மற்றும் சிம்மம் சுப ஒளி தொடர்புடன் ஒளி மிக்கதாக விளங்கும்.

இந்த நிலையில் வேறு எந்த பாவ கிரகங்களின் தொடர்பு ஏற்படாத போது இந்த நபர் ஒரு IAS அதிகாரி மற்றும் அதற்கு இணையான அதிகாரத்தில் இருப்பார். கூடுதலாக 10 ஆம் வீடு வலுப்பெறும் போது அவர் அதிகாரம் பொருந்திய அமைச்சர் நிலையில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.