ஆடி மாதம் வாகனம் வாங்கலாமா?

282

ஆடி மாதம் ஏன் சுபகாரியங்கள் செய்யக்கூடாது?

ஆடி மாதம் சுபகாரியங்கள் செய்வதை தள்ளி வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது. திருமணமான புதுமண தம்பதிகளை கூட ஆடி மாதம் அவர்களின் அம்மா வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொன்ன நமது முன்னோர்கள், ஏன் ஆடி மாதம் நல்ல விசேஷங்களை தள்ளி வைக்க சொல்கிறார்கள்? இதன் தாற்பரியத்தை ஜோதிட ரீதியாக இந்த பதிவில் காண்போம்.

மேலும் படிக்க: மேஷம் – ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021!

பொதுவாக ஜோதிடத்தில் எல்லா கிரகங்களுக்கும் ஆரோ கணம் – உச்ச நிலையை நோக்கி செல்லுதல், அவரோ கணம் – நீச்ச நிலையை நோக்கி செல்லுதல் என்று ஒளியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளது. அதன்படி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வரும் பூமி ஆறு மாதம் சூரியனின் ஒளியை அதிகமாக பெரும் காலமாக (தை – ஆனி) இருக்கும் ஆறு மாதங்கள் உத்தராயணம் எனவும், சூரியனின் ஒளியை குறைவாக பெரும் காலமான (ஆடி – மார்கழி) இருக்கும் மாதங்கள் தட்சயானம் எனவும் அழைக்கப்படும்.

மேலும் அறிந்து கொள்ள: திருநீறில் அறிவியல் உண்மையா? அது எப்படி?

சூரியன் தான் நமது சூரிய குடும்பத்தின் ஆதார கிரகம். சூரியனின் ஒளியை அடிப்படையாக கொண்டு தான் நமது பூமியின் உயிர்கள் இயங்குகிறது.  (உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா? உங்கள் ஜாதகத்தின் பலன்களை அறிந்து கொள்ள வேண்டுமா? இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிட கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதக விவரங்களை அனுப்பி குறைந்த கட்டணத்தில் நிறைவான பலன்களை பெறுங்கள்)…

இதையும் படிங்க: காசு, பணத்தை எங்கு வைத்தால் கூடிக் கொண்டே இருக்கும் தெரியுமா?

இதன் அடிப்படையில் தான் பூமி சூரியனின் ஒளியை நோக்கி நகரும் தை மாதத்தின் முதல் நாள் நாம் பொங்கல் பண்டிகையாக சூரியனுக்கு நன்றி சொல்கிறோம். தை மாதம் அறுவடை ஆரம்பிக்கும் மாதமாக இருக்கும், உழவர்களுக்கு பணவரவு இருக்கும் மாதமாகவும் இருக்கும். எனவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்கிறோம். நமது தமிழ் மாதங்கள் சூரியன் பயணம் செய்யும் 12 ராசிகளை அடிப்படியாக கொண்டு அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க: தனுசு ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021

சூரியன் மேஷ ராசியில் இருக்கும் பொது சித்திரை மாதம் தொடங்கி, மீனத்தில் சஞ்சரிக்கும் பொது பங்குனி மாதமாக இருக்கும். மேஷத்தில் சூரியன் உச்ச நிலை எனப்படும் அதிக ஒளியை கொடுக்கும் நிலையில் இருப்பார். எனவே இந்த சித்திரை மாதம் நமக்கு கோடை காலம் எனப்படும் உஷ்ணமான காலம். சூரியன் துலாம் ராசியில் நீச நிலையை அடைவார், இந்த ஐப்பசி மாதம் பூமி சூரியனை விட்டு சற்று விலகி இருக்கும், சூரியனின் ஆத்ம ஒளி பூமிக்கு குறைவாக கிடைக்கும். எனவே அது குளிர் காலத்தின் ஆரம்ப நிலையாக இருக்கும். எல்லாம் வல்ல பரம்பொருள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.