இறைவனின் அருள் எனக்கு கிடைக்குமா ?

61
இறைவனின் அருள் எனக்கு கிடைக்குமா ? ஜோதிட விளக்கம்
கேளுங்கள் கொடுக்கப்படும் , தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் சொல்லுகிறது . மனிதராய் பிறந்த அனைவருக்கும் ஏதேனும் ஆசைகள் , விருப்பங்கள் இருக்கும் . கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதை கடவுளிடம் பிரார்த்தனையாக வைப்பது வாடிக்கை . ஒரு சிலருக்கு நினைப்பதுக்கு முன்னேரே கடவுளின் அருளினால் வேண்டியது கிடைக்கிறது . ஒரு சிலருக்கோ நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு ஏற்ப வாழ்க்கை அமைத்து கடவுளிடம் அருளுக்காக  மன்றாடி கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது . ஜோதிடத்தில் 5 அம் வீடு பூர்வ புண்ணிய இஸ்தானம்  எனப்படும் இந்த வீடு நமது சிந்தனை , செயல் , நடத்தை , அதிஷ்டத்தை  குறிப்பதாக இருக்கும் .  நமது பூர்வ ஜென்மத்தின் பாவ , புனியங்களுக்கு ஏற்ப இந்த பாவகம் செயல்படும் என்று வேத ஜோதிடம் கூறுகிறது . 9 ஆம் பாவகம் தர்ம இஸ்தானம்  ஆகும் . இந்த ஜென்மத்தில் நாம்  செய்ய போகும் தர்ம காரியங்களையும் , ஆன்மீக ஈடுபாடு , இறை வழிபாடுகள்  ஆகியவற்றை குறிக்கும் . ஒருவர்க்கு இறை அருள் எப்பொழுது கிடைக்கும் , இறை நம்பிக்கை இல்லாத நாத்திகர்கள் எவ்வாறு உருவாகிறார்கள் ? ஞானிகளின் ஜாதகம் எவ்வாறு இருக்கும் ? போன்ற விளக்கங்களை இந்த பதிவில் அலசுவோம் . உங்கள் ஜாதகத்தில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் அல்லது எதிர் காலத்தை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் இருந்தால் , இந்த கட்டுரையின் ஆசிரியல் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி குறைந்த கட்டணத்துடன் பலன்களை அறியலாம் .
ஜோதிடத்தில் ஆன்மீக கிரகங்கள் மூன்று , அவை குரு , சனி , கேது ஆகும் . குரு ஒரு மதத்தின் சாஸ்திரம் ,ஆலய பணி , ஆன்மீக போதனை , இறை சடங்குகள் ,  சம்பிரதாயங்களை பிரதிபலிக்கும் உயர் மட்ட ஆன்மீக நிலையை குறிப்பார் , சனி ஆன்மீகத்தின் இன்னொரு பரிணமான சித்து வேலைகள் , மாந்திரீகம் , தாந்தீரிகம் , யாட்சிணி வழிபாடு , குறி சொல்லுதல், ஆவிகளுடன் பேசுதல் , இறப்புக்கு பின் என்ன நடக்கும் என்ற  ஆராய்ச்சிகள்  போன்ற நிலைகளை குறிப்பார் . கேது மதங்களை தாண்டி மெய் ஞான அறிவை குறிப்பார் , குண்டலினி , யோக நிலை , பரம்பொருளுடன் ஒன்றினையும் முக்தியை குறிப்பவரும் இவரே .
இறை அருள் எப்பொழுது கிடைக்கும் :
1. ஜாதகரின் 5 ஆம் வீடு சுபர் வீடு ஆகி  ( அசுப வீடாக இருந்தாலும் கூட ) , அந்த பாவகம் சுப ஒளி தொடர்பு பெரும் பொழுது அவருக்கு இறைவன் அருள் பரிபூர்ணமாக இருந்து அவருக்கு தகுந்த தசை புக்தியில் அவருக்கு வேண்டியதை அவர் வேண்டும் முன்னேரே கிடைக்கிறது . இவருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளவரா ? அல்லது மறுப்பாளரா என்பதை காண அவரது ஜாதகத்தின் கேதுவின் சுபத்துவதையும் , ஆன்மீக வீடுகளான தனுசு மற்றும் கும்பத்தின் நிலையை  கண்டறிய வேண்டும் .
2. இறை நம்பிக்கை அல்லாத நாத்திகர்களின் ஜாதகங்களில் , கேது சனியால் பார்க்கப்பட்டு சுப ஒளி தொடர்பு இல்லாமல் இருக்கும் . இதே போல் ராசி மற்றும்  5 & 9 ஆம் பாவங்களில் எதோ ஒன்று  பாவ கிரகங்களின் தொடர்பில் இருக்கும் . இவர்கள் இறை சக்தியை உணராதவர்களாக , நம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள் . ராசி மனதை குறிக்கும் , 5 அம் வீடு எப்படி பட்ட எண்ணங்கள் உள்ளவர் என்பதை குறிக்கும் .இந்த வீடுகள் அசுப தொடர்பு ஏற்படும் பொது இறைவன் மீது வெறுப்பு , அவ நம்பிக்கை ஏற்படும் .
3. ஒருவரின் ஜாதகத்தில் ராசி அல்லது லக்கினத்துடன் குரு தொடர்பு கொண்டு , சனியும் சுப ஒளி தொடர்ப்பில் இருந்தால் அவர் பக்தி மிக்கவராக இருப்பார் . இந்த நிலையில் குரு அதிக சுப தொடர்ப்புடன் இருக்கும் பொது அவர் இறைவனிடம் அன்பை மட்டும் எதிர்பாக்கும் தூய பக்தி கொண்டவராகவும் , சனி அதிக சுப ஒளி தொடர்புடன் இருக்கும் பொது அவர் இறைவனிடம் அருள் அல்லது பொருள் வரங்களை எதிர்பாக்கும் பக்தராகவும் இருப்பார் . கேது அதிக சுப தொடர்புடன் இருக்கும் பொது அவர் முற்றிலும் பற்றற்ற மக்களின் மத்தியில் வாழும் ஞானியாக இருப்பார் .
4. குரு , சனி கேது ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு ராசி அல்லது லக்கினத்துடன் சம்பந்தம் படும் பொது , அவர் ஆன்மிகத்தில் மிக பெரிய நிலையை அடைவார் . கூடுதலாக சுக்கிரன் மற்றும் 7 ஆம் பாவகம் கேடும் பொது அவர் சந்நியாசியாக துறவியாக  இருப்பார் .
எல்லாம் வல்ல இறைவனின் அருள் ஆசி அனைவர்க்கும் கிடைக்கட்டும் என்று வேண்டி கொள்கிறேன் .