உணவில் எச்சரிக்கை தேவை: குல தெய்வ வழிபாடு செய்யலாம்!
டிசம்பர் 04 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (04-12-2022) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…
மேஷம்: பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் குறித்து நல்ல தகவல் வரும். பொழுதுபோக்கு விசயங்களில் ஈடுபாடு கூடும்.
ரிஷபம்: சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சிறுதூர பயணங்கள் வெற்றி தரும். உறவினர்கள், நண்பர்களை கண்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்: அற்புதமான நாள். உறவுகள், நட்புகள் நெருக்கமாக இருக்கும் நாள். விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். நல்லவர்கள் உங்களை தேடி வருவார்கள்.
கடகம்: தான, தர்மம் செய்வீர்கள். நிறைய நன்மைகள் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. வியாபாரத்தில் வளர்ச்சி காணப்படும்.
சிம்மம்: வெற்றிகள் பெருகும் ஒரு நாள். காலையில் 10 மணி வரையில் பொறுமையாக இருந்தால் அதன் பிறகு யோகம் தேடி வரும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். சகோதர உறவு மேம்படும். மனதில் மகிழ்ச்சி, உற்சாகம் குடி கொள்ளும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி: பொறுமையாக இருக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனமாக இருக்க வேண்டும். உடல் நலனில் அக்கறை தேவை. வியாபாரம் நன்றாக நடக்கும்.
துலாம்: அற்புதமான நாள். வாழ்க்கையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். கல்யாண விசயம் கூடி வரும். திருமணத்திற்கு வரன் அமையும். ஏராளமான நன்மைகள் அமையும். வரவுகள் உயரும். பொழுதுபோக்கு விசயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: உடல் நலனில் அக்கறை தேவை. புதிய வேலை வாய்ப்பு முயற்சியில் இறங்குவீர்கள். அக்கம் பக்கத்தாரை அனுசரித்து செல்ல வேண்டும். உணவு சாப்பிடுவதில் எச்சரிக்கை தேவை. பதவி பட்டங்கள் அங்கீகாரம் கிடைக்கும் ஒரு நாள்.
தனுசு: குலதெய்வ வழிபாடு வெற்றி தரும். பொழுதுபோக்கு விசயங்களில் கலந்து கொள்வீர்கள்.
மகரம்: மன தைரியம் அதிகரிக்கும். சொத்து, சுகம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். குடும்பத்து பிரச்சனைகள் எல்லாம் தீரும். கால பைரவர் வழிபாடு அற்புதமான வழிபாடு. குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். எல்லா நன்மைகளும் கூடி வரும்.
கும்பம்: கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். மனசு உற்சாகமாக சந்தோஷமாக இருப்பீர்கள். முன் ஜென்ம அனுக்கிரகம் கிடைக்கும். மதிப்பு, மரியாதை உயரும். பொழுதுபோக்கு விசயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மீனம்: நல்ல தன லாபம் உண்டாகும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உணவு பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை தேவை. ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். வேலை வாய்ப்பு முயற்சி வெற்றி தரும்.