உபய லக்னங்களுக்கு பாதகாதிபதியின் பாதிப்புகள்!

113

உபய லக்னங்களுக்கு பாதகாதிபதியின் பாதிப்புகள்!

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளும், பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் ராசியின் இயக்கத்தை பொறுத்து சரம் (இயங்கி கொண்டிருக்கும்), சிரம் (நிலையானது), உபயம் (நிலையானது மற்றும் இயங்கி கொண்டிருக்கும்). மேஷம், கடகம், துலாம் மற்றும் மகரம் சர ராசியிலும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் சிர ராசியின் வரிசையிலும்,  மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற ராசிகள் உபய ராசியிலும் வரும்.

இதில் சர ராசிகள் சிறப்பானவை என்று நமது ஜோதிட முன்னோர்களால் கருதப்படுகிறது. சர ராசியில் இருக்கும் கிரகங்கள் நல்ல பலன்களை தரும் என்று சொல்லப்படுகிறது. இந்த பதிவில் நாம் உபய லக்னத்திற்கு உரிய பாதகாதிபதி யார்? அவர் தசையில் என்ன நடக்கும் என்பதை பார்ப்போம். உங்கள் ஜாதகம் தற்பொழுது என்ன பலன்கள் தந்து கொண்டு இருப்பதை அறிய இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குறைந்த கட்டணத்தில் நிறைவான பலன்களை பெறுங்கள்.

பாதகாதிபதி:

நம்முடைய லக்கினத்தின் தன்மைக்கு ஏற்ப ஏதேனும் ஒரு வீட்டின் அதிபதி பாதகாதிபதி எனும் ஸ்தானத்தை அடைவார். அந்த வீட்டில் பாதகாதிபதி வலு பெற்று அமர்ந்து நமக்கு அவரின் தசா நடப்பில் வரும் போது பாதக விஷயங்கள் நடைபெறும். சர் ராசிகளுக்கு 11 ஆம் அதிபதியும், சிர ராசிகளுக்கு 9 ஆம் அதிபதியும், உபய ராசிகளுக்கு 7 ஆம் அதிபதியும் பாதக ஸ்தானத்தை அடைவார்கள்.

உபய ராசியில் பாதகாதிபதி நிலை:

  1. இந்த உபய ராசிகளான  மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்றவைக்கு, 7 ஆம் அதிபதி பாதக, மாரக, கேந்திராதிபத்திய தோஷத்தை அடைவார். அதாவது மிதுனம், கன்னி லக்னத்திற்கு 7இல் அல்லது அந்த வீட்டின் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் குருவும், தனுசு மற்றும் மீனம் லக்னத்திற்கு 7இல் அல்லது அந்த வீட்டின் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் புதனும் பாதகாதிபதி எனும் நிலையை அடைவார்கள்.
  2. பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் வலுத்து இருந்து மேலும் சுப தொடர்புகள் இருந்தால் அவர் உபய லக்கினங்களின் திருமண வாழ்க்கையை கெடுப்பார். மற்றும் அவர் தசா வரும் பொழுது மரணத்திற்கு நிகரான துன்பங்களை தருவார்.  ஜெயலலிதா அம்மையார் மிதுன லக்கினத்தில் பிறந்து 7இல் தனுசு வீட்டில் ஆட்சி பெற்ற குரு இருந்து திருமண வாழ்வை தடுத்ததும், MGR அவர்களுக்கு கன்னி லக்கினமாகி 7 ஆம் வீடான மீனத்தில் குரு மற்றும் வளர்பிறை சந்திரன்  இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்வை கொடுத்ததும் இந்த பாதகாதிபதி நிலையில் தான்.
  3. பாதகாதிபதி துன்பங்களை தராமல் இருக்க வேண்டும் என்றால் அவர் பாதக வீட்டுக்கு 6, 8 மற்றும் 12 இல் மறைய வேண்டும். பாதக வீட்டில் இருந்தாலும் செவ்வாய், சனி மற்றும் ராகு போன்ற கிரகங்களால் சேதப்பட வேண்டும்.
  4. பாதகாதிபதி வீட்டில் பாதகாதிபதியும், பௌர்ணமி சந்திரனும் சேர்ந்தால் கடும் பாதிப்புகள் இந்த பாதகாதிபதி திசையில் இருக்கும்.  எல்லாம் வல்ல இறைவன் உங்களை ஆசீர்வதிப்பார் என்று வேண்டி கொள்கிறேன்.